பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 345

கொத்தனார் ஒருவரிடம் காண்ட்ராக்ட் முறையில் அளித்து ஏற்பாடு செய்திருந்தார்கள் அரவிந்தனும் முருகானந்தமும். அன்று கொத்தனாரைப் பார்த்துப் பேசிவிட்டு வேலை எவ்வளவில் நிறைவேறியிருக்கிறதென்பதைக் கவனித்து வருவதற்காக அவர்கள் இருவரும் போய் இருந்தார்கள்.

மதுரை பஸ் நிலையத்துக்குத் தென்புறமுள்ள பள்ளத்துக்கு அருகே பழைய காலத்தில் புண்ணிய நதியாயிருந்து இப்போது புண்ணியமும் இல்லாமல் கண்ணியமுமில்லாமல் வெறும் சாக்கடையாக மாறிவிட்ட சிற்றாறு ஒன்று இருக்கிறது. அதற்குக் "கிருதமாலா நதி என்று பெயர். இந்த ஆறு மழைக் காலங்களில் நீரோட்டம் பெருகிக் கரைமீறி விடுவதால்தான் அரிசனங்களின் குடிசைகளுக்கு அடிக்கடி சேதம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இந்த ஆற்றின் போக்கைச் சிறிது வழி விலக்கி உயரமாகக் கரை எடுத்து விட்டிருந்தும் மழை அளவு மீறிப் பெய்கிற காலங்களில் சிதைவு நேர்ந்து கொண்டுதான் இருந்தது. அதனால், இந்த முறை கொத்தனாரிடம் பொறுப்பை ஒப்படைக்கும்போதே 'நிறைய மண் அடித்துத் தரையைக் கெட்டிப்படுத்தி மேடாக்கிக் கொண்டு அப்புறம் குடிசைகளைப் போடுங்கள் என்று எச்சரிக்கை செய்திருந்தான் அரவிந்தன். இப்போது போய்ப் பார்த்ததில் தான் சொல்லியிருந்தபடியே அந்தக் கொத்தனார் எல்லாம் செய்திருந்தது கண்டு அரவிந்தன் திருப்தியடைந்தான். வேலை ஏறக்குறைய நிறைவேறியிருந்தது. கொத்தனார் அரவிந்த னுக்கு அருகிலே வந்து மெல்லக் கேட்டார். 'ஐயா திறப்பு விழாவுக்கு யாரை அழைக்கப் போlங்க? மந்திரிங்க யாராச்சும் வராங்களா?" - - - - - -

இதைக் கேட்டு அரவிந்தன் மெல்லச் சிரித்தான். 'நம் கொத்தனார் கேட்ட கேள்வியைக் கவனித்தாயா முருகானந்தம்? மதத்திலும், சமயங்களிலும், அனாவசியமான சடங்குகளையும், மூடப் பழக்கங்களையும் ஒழித்து விட வேண்டும் என்கிற விழிப்புணர்ச்சி இந்த நாட்களில் நம்மைப் போன்ற இளைஞர் களுக்கு எல்லாம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் ஒரு முடிச்சை அவிழ்க்கிற முயற்சியில் இன்னும் பல முடிச்சுக்களைப் போட்டுவிடுவதுபோல் பழைய அனாவசியச் சடங்குகளை நீக்கும் முயற்சிகளினால் புதிய அநாவசியச் சடங்குகளை உண்டாக்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/347&oldid=556070" இலிருந்து மீள்விக்கப்பட்டது