பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 குறிஞ்சி மலர்

பொன்னகரத்தில் முருகானந்தத்தின் வீட்டில் ஒரு மணி நேரத்துக்கு மேல் தாமதித்தான் அரவிந்தன். "பையனுக்கு பெரிய இடத்திலிருந்து பெண் வருகிறது - என்றவுடன் முருகானந் தத்தின் பெற்றோர் திகைத்துமருண்டனர். அவர்களுக்கு எல்லா வற்றையும் விவரமாக எடுத்துக்கூறி விளக்க வேண்டியிருந்த தனால் அரவிந்தனுக்கு அவ்வளவு நேரமாயிற்று. கடைசியில் அவர்களுடைய இசைவையும் பெற்று விட்டான். அரவிந்தன் சொல்லி அவர்கள் எதையும் மறுத்ததே இல்லை. பொறுப்புத் தெரிந்த பிள்ளை என்று அவனைக் கொண்டாடுவார்கள், முரு கானந்தத்தின் பெற்றோர். அரவிந்தன் கோடைக்கானலிலிருந்து புறப்படும் போது, 'முருகானந்தத்தின் பெற்றோரைக் கலந்து கொண்டு முடியுமானால் நிச்சயதாம்பூலத்துக்கு ஒருநாளும் குறிப்பிட்டு எழுதவேண்டும்' என்று மங்களேசுவரி அம்மாள் அவனிடம் வேண்டிக்கொண்டிருந்தாள். அந்த அம்மாள் வேண்டிக் கொண்டிருந்தபடி அப்போதே அங்கே ஒர் கார்டில் விவரம் எழுதி நான்கு துனியிலும் மஞ்சள் தடவி மறுநாள் கோடைக்கானவில் கிடைக்கிறாற் போல் அவசரமாகத் தபாலிலும் சேர்க்கச் செய்துவிட்டான் அரவிந்தன். அவர்கள் எல்லோரும் வற்புறுத்திய தால் இரவுச் சிற்றுண்டியை அங்கேயே சாப்பிட வேண்டிய தாயிற்று.

பொன்னகரத்திலிருந்து அவன் அச்சகத்துக்குத் திரும்பிய போது இரவு சுமார் எட்டு மணி இருக்கலாம். அந்த நேரத்திலும் அங்கே முன் பக்கத்து அறையில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. திருநாவுக்கரசு ஏதாவது வரவு செலவுக் கணக்கு எழுதிக் கொண் டிருப்பான் என்று நினைத்து உள்ளே நுழைந்த அரவிந்தன் மீனாட்சி சுந்தரமே அங்கு இருப்பதைப் பார்த்து வியப்புற்றான் கன்னத்தில் கையூன்றிக்கொண்டு சோர்ந்து போனாற் போல் கவலையோடு ஏதோ சிந்தித்துக் கொண்டிருக்கிற மாதிரி இருந்தார் அவர். முகம் பார்க்க நன்றாக இல்லை. இந்த விதமாக மிகவும் தளர்ந்த நிலையில் பெரும்பாலும் அவரைப் பார்த்தில்லை அவன். மிகச் சில சமயங்களில் மட்டுமே இத்தகைய நிலையில் அவரைக் கண்டிருக்கிறான். - . .

'உங்களுடைய உடம்புக்கு என்ன?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/354&oldid=556077" இலிருந்து மீள்விக்கப்பட்டது