பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 குறிஞ்சி மலர் தத்தை உடனிருந்து கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டுப் புறப்பட்டிருந்தான் அவன். கிராமத்தில் சிற்றப்பாவின் பதினாறாம் நாள் கருமாதிக்குப் பர்மாக்காரர் வரவில்லை. அவர் வரமாட்டார் என்பது அரவிந்தன் எதிர்பார்த்ததுதான். 'சிற்றப்பாவின் கேதத்துக்கு அவர் வந்ததே தன்னை வசப்படுத்தி அழைத்துப் போய் மீனாட்சிசுந்தரத்திடமிருந்து பிரித்து விடலாம் என்ற நோக்கத்தோடு தான் என்பதை இப்போது அரவிந்தன் ஒருவாறு உய்த்துணர்ந்து புரிந்து கொண்டிருந்தான். தான் அவருடைய வலையில் சிக்காமல் வந்துவிட்டதனால் இனிமேல் தன்னையும் மீனாட்சிசுந்தரத்தையும், பூரணியையும் தம்முடைய மொத்தமான எதிரிகளாக வைத்துக் கொண்டு அவர் வைரம் பாராட்டுவார் என்றும் அவன் உணர்ந்திருந்தான்.

மிகச் சிறிய உணர்ச்சிகளையும் சில்லறை நோக்கங்களையும் தவிர பெரிதாக எதையும் நினைக்கத் தெரியாத அப்பாவிக் கிராமத்து மக்கள் அரவிந்தனுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றிப் பலவிதமாகக் கற்பனை செய்தார்கள். அவன் கிராமத் துக்கே வந்து குடியேறி சிற்றப்பாவின் சொத்து சுகங்களை ஆளத்தொடங்குவான் என்று எல்லாருமே எதிர்பார்த்தனர். 'தம்பி, இனிமேல் ஊரோடு வந்துவிட வேண்டியதுதான். மதுரையில் என்ன காரியம்? ஒருத்தனுக்கு கீழே கைகட்டிச் சேவகம் செய்கிற வேலை. இனிமேல் எதற்கு? சொத்துக்களெல்லாம் மேற் பார்க்கணும். சிற்றப்பாவைப்போல் நகை ஈட்டுக்குக் கடன் கொடுக்கிற காரியத்தையும் தொடர்ந்து செய்யலாம். என்னமோ நான் உனக்குச் சொல்கிற அட்வைஸ் இதுதான் என்று தமக்குத் தெரிந்த ஒரே ஆங்கில வார்த்தையை கர்வத்தோடு உபயோகித்து அரவிந்தனிடம் அறிவுரை கூறினார் ஒரு கிழவர். அரவிந்தன் அவருடைய அறிவுரையைக் கேட்டுத் தனக்குள் சிரித்துக் கொண்டான். கருமாதி முடிந்த மறுநாள் காலை அரவிந்தன் செய்த முதல் காரியம் சிற்றப்பாவின் வீட்டு வாசலில் இங்கே நகை ஈட்டின் பேரில் வட்டிக்குக் கடன் கொடுக்கப்படும் என்று அழுக்கும் கறையும் படிந்து தொங்கிய அறிவிப்புப் பலகையைக் கழற்றி எறிந்ததுதான்.

'சின்னதம்பி, அதைக் கழற்றாதீங்க இன்னும் பல பேர் கணக்கு முடிக்காமல் கெடக்கு. ஈடு வைத்த நகையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/356&oldid=556079" இலிருந்து மீள்விக்கப்பட்டது