பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 355 ரொம்பப் பேர் திருப்பிக்கிட்டுப் போகலை. வட்டி தராமல் பலபேர் கழுத்தறுப்புச் செய்றாங்க" என்று ஒப்பாரி வைத்தார் சிற்றப்பாவின் கணக்குப்பிள்ளை. -

சிரித்தவாறே அரவிந்தன் எல்லாக் கணக்கையும் பார்த்தான்; தாலியிலிருந்து மோதிரம் வரை ஏழை எளியவர்கள் கடனுக்காக ஈடுவைத்த நகைகள் குவிந்து கிடந்தன. கணக்குப்பிள்ளையை விசாரித்ததில் நகையை ஈடுவைத்தவர்கள் உள்ளுரிலும், அக்கம் பக்கத்துச் சிறு கிராமங்களிலும் இருப்பதாகத் தெரியவந்தது. 'உடனே சைக்கிளில் புறப்பட்டுப் போய் எல்லோருக்கும் தகவல் தெரிவித்து இங்கே வரச் செய்யுங்கள்' என்று கணக்குப் பிள்ளையைத் துரத்தினான் அரவிந்தன். அவரும் என்னென்னவோ சொல்லி மறுத்தார். 'கடன் கொடுத்தவங்க, கடன் வாங்கினவங் களைப் போய் அழைக்கிறது வளமை இல்லீங்க என்றார் கணக்குப்பிள்ளை.

“வளமையாவது மண்ணாங்கட்டியாவது. நான் சொல்லுகிற படி போய் அழைத்து வாரும் ஐயா!' என்று அரவிந்தன் சிறிது இரைந்த் பின்பே அவர் தடை சொல்லாமல் புறப்பட்டுப் போனார். பகல் பன்னிரண்டு மணிக்குள் நகை ஈடு வைத்தவர்கள் ஒவ்வொருவராக வந்து வீட்டின் முன்புறம் கூடி விட்டார்கள். வறுமை வாட்டங்களாலும் ஏழைமை ஏக்கங்களாலும் இளைத்த அவர்களுடைய மெலிந்த தோற்றங்களைப் பார்த்து நெஞ்சு நெகிழ்ந்தான் அரவிந்தன். விடுதலையும், உரிமை வாழ்வும் பாரத நாட்டு நகரங்களின் வளர்ச்சிக்கும் வளங்களுக்கும் பயன்பட்டிருக் கிற அளவு கிராமங்களுக்கும் அவற்றில் வாழும் அப்பாவி மனிதர்களுக்கும் பயன்படுகிற காலம் இன்னும் சரியாக வரவில்லை என்று அவன் உணர்ந்தான். 'பாரத நாட்டின் ஆயிரமாயிரம் கிராமங்களில் இருளடைந்த சூழலும் இருளடைந்த உள்ளங்களுமாக வாழும் எளியவர்களை மனத்தில் வைத்துக் கொண்டுதான் காந்தியடிகள் உழைத்தார். அவருடைய உழைப்பின் பயன் நகரங்களின் எல்லையோடு நின்று போய் விட்டதே என்று எண்ணிக் குமுறினான் அரவிந்தன். வந்திருந்தவர்களையெல்லாம் உட்காரச் செய்துவிட்டு உள்ளே திரும்பி, 'கணக்குப் பிள்ளை அடகு நகைகளையும் அவற்றுக்கான பத்திரங்களையும் எடுத்துக் கொண்டு வாருங்கள்' என்று கட்டளையிட்டான். அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/357&oldid=556080" இலிருந்து மீள்விக்கப்பட்டது