பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 36 i

மரணம் எல்லோருக்கும் வேதனை அளித்திருந்தது. இருட்டு வதற்குச் சிறிது நேரத்துக்கு முன் திருநெல்வேலியிலிருந் தும், திருச்சியிலிருந்தும் பெண்கள் இருவரும் வந்து சேர்ந்து விட்டார்கள். இரண்டு மாப்பிள்ளைகளுமே உடன் வந்திருந்தார்கள். r

வையையில் வெள்ளம் போனதால் பாலம் சுற்றிச் செல்லூர் வழியாகத் தத்தனேரிச் சுடுகாட்டுக்குப்போய் எல்லாம். முடித்துவிட்டுத் திரும்பும்போது இரவு பதினோரு மணிக்கு மேல் இருக்கும். அரவிந்தன் பித்துப் பிடித்தவன் மாதிரிச் சோர்ந்து நடைப்பிணம் போல் அச்சகத்துக்குத் திரும்பினான். அந்தச் சமயத்தில் அரவிந்தனுக்கு ஆறுதலாக உடனிருக்க வேண்டியது அவசியமென்று தோன்றியதால் முருகானந்தமும் உடன் வந்தான். அச்சகத்துக்குள் நுழையுமுன், 'இதோ இதுதான் அப்பா, அவருடைய உயிருக்கு எமனாக வந்து தோன்றியது! நீ கிராமத் துக்குப் போன பின் இரண்டு நாட்களில் ஒருவிதமாக உடல் நிலை தேறி அச்சகத்துக்கு வந்து போகத் தொடங்கியிருந்தார். இந்தக் கட்டிடத்தைப் பர்மாக்காரர் விலைக்கு வாங்கியதையும், இதில் புது மண்டபத்து மனிதர் அச்சகம் வைக்கப் போகிறார் என்பதையும் கேள்விப் பட்டாரோ இல்லையோ, மறுநாள் மீண்டும் இரத்தக் கொதிப்பு அதிகமாகிப் படுக்கையில் விழுந்து விட்டார்' என்று முருகானந்தம் பக்கத்துக் கட்டிடத்தைச் சுட்டிக் காட்டினான். திகைப்போடு பக்கத்துக் கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தான் அரவிந்தன். 'குமரகுருபர விலாஸ் காப்பி சாப்பாட்டு ஒட்டல்' என்று புகை படிந்த சுவரில் அங்கே வழக்கமாகத் தொங்கும் ஒட்டல் விளம்பரப் பலகையை இப்போது காணவில்லை. புது வெள்ளைப் பூச்சுடன் கூடி அழகாயிருந்த கட்டிடத்தில் ஒட்டல் விளம்பரப்பலகைக்குப் பதில் அதே இடத்தில் 'காமாட்சி அச்சகம் என்ற எனாமல் பெயர் தெருவிளக்கின் ஒளியில் பெரிதாகிப் பளிச்சென்று தெரிந்தது. கீழே உரிமையாளர் என்ற சிறிய எழுத்துக்களுக்கு நேரே புதுமண்டபத்து மனிதருடைய பெயர் காணப்பட்டது. இரண்டு வாரங்கள் கிராமத்தில் இருந்து விட்டுத் திரும்பி வருவதற்குள் இங்கே இத்தனை காரியங்கள் நடை பெற்றிருக்கின்றனவா? என்று மலைத்தான் அரவிந்தன். பர்மாக்காரருடைய புலிமுகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/363&oldid=556086" இலிருந்து மீள்விக்கப்பட்டது