பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 369

நீட்டிக்கொண்டு பாய்ந்தான். சிறுமி சிட்டாகப் பறந்து ஓடி விட்டாள். பெண்களுக்கு நடுவில் மணக்கோலத்தில் புத்தழகும் பூரிப்புமாக அடக்கத்தோடு உட்கார்ந்திருந்த வசந்தா மெல்லத் தலைநிமிர்ந்து அண்ணனுக்கு நல்லா வேணும் என்று சொல்லிச் சிரித்தாள். 'குழந்தை வாக்கு தெய்வ வாக்கு மாதிரி. இல்லாததை அது ஒன்றும் சொல்லிவிடவில்லை? என்றாவது ஒருநாள் நடக்க வேண்டியதுதானே? என்று மங்களேசுவரி அம்மாள் புன்னகை யோடு கூறினாள். அந்த சிறுமி செய்த வம்பினால் விளைந்த சிரிப்பும் கலகலப்பும் அடங்க சில விநாடிகள் ஆயின. அரவிந்தன் தன் நினைவுக்கு வந்து பையிலிருந்து ஸ்டோர் ரூம் சாவியை

எடுத்து, "இந்தா சாவியை வாங்கிக் கொள்' என்று பூரணியிடம் நீட்டினான். ஒதுங்கி நாணித் துவண்டு நின்ற பூரணி மெல்லத் தலை நிமிர்ந்து நெஞ்சைக் கொள்ளையிடும் எழில் விழிகளால் நோக்காதது போல் நோக்கி முல்லைச் சிரிப்பில் நெகிழும் கொவ்வை இதழ்களில் குழைவு கனிய அவன் கையிலிருந்து சாவியை வாங்கிக் கொண்டாள். அப்போது தன் கண்கள் பருகிச் சிறைப்பிடித்த அவள் முகத்தின் ஒப்பிலா வனப்பை அவன் தன் இதயத்தில் பதிய வைத்துக் கொண்டான். 'நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக் குறுமுறுவல் பதித்த முகமல்லவா அது? தன்னுடைய பழைய கவிதை நினைவு வந்தது அவனுக்கு. அத்தர், புனுகு, சவ்வாது எல்லாம் இணைத்துக் கலந்து பூசின

மாதிரி நினைவுகளிலும் உடம்பிலும் சுற்றி இலங்கிடும் சூழ் நிலையிலும் ஏதோ மணந்தது அரவிந்தனுக்கு. ஆனால் மறு விநாடியே, கையில் தீபத்தையும் கண்களில் கண்ணிரையும் ஏந்திக் கொண்டு இருளடைந்து மனிதக் கும்பலின் நடுவே, ஒளி சிதறி நடந்து செல்லும் வன தேவதை போன்று பூரணி நினைவில் வந்து அவன் நினைவைச் சிலிர்க்க வைத்தாள். மனத்தைக் கோவிலாக் கினாள்.

பெண்ணுக்குத் திருமணம் நன்றாக முடிந்த திருப்தியில் மங்களேசுவரி அம்மாளும் பூரணியோடு இலங்கைக்குப் புறப் பட்டு விட்டாள் - அந்த அம்மாளிடம் பாஸ்போர்ட் ஏற்கனவே இருந்தது. விசா மட்டும் அவசரமாக ஏற்பாடு செய்து அரவிந்தன் வாங்கிக் கொடுத்தான். சென்னையிலிருந்து திருச்சி வழியாக யாழ்ப்பாணம் செல்லும் ஏர் சிலோன் விமானத்தில் அவர்கள்

கு.ம - 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/371&oldid=556094" இலிருந்து மீள்விக்கப்பட்டது