பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 குறிஞ்சிமலர் அந்த ஆர்வம் நிறைவேறாமல் செய்தது உன் தாய்தான் என்று அம்மா இறந்தபின் பலமுறை பூரணியிடம் ஏக்கத்தோடு கூறி யிருக்கிறார் அவள் தந்தை. உலகம் முழுவதும் தமிழும் தமிழ்ப் பண்புகளும் வாழச் செய்து விட வேண்டும் என்று அப்பாவுக்கு ஒரு பேராசை உண்டு. அவரைச் சரியாகப் புரிந்து கொள்ளாத வர்கள் சிலர், இந்த இலட்சியப் பேராசையை வெறி என்று தவறாக எண்ணிக்கொண்டிருந்தார்கள். வெறிக்கும் அவருக்கும் வெகு தூரம். "பூரணி தமிழ் மொழி பேசுகிற இனம் உலகம் முழுவதும் தன் உறவுகளைப் பரவ விட்டிருக்கும் பெரிய குடும்பம் அம்மா! நிறையப் பிள்ளைகளைப் பெற்ற தாய்த் ஒவ்வொருவராக வளர்த்து ஆளாக்கித் தகுதியான இடங்களுக்கு அனுப்பி விட்டுத் தான் மட்டும் தாய்மைப் பெருமிதத்தோடு இருந்த இடத்திலே தெய்வமாக மாறிக் கொண்டிருப்பது போல் உலகத்து மூலை முடுக்குகளுக்கு எல்லாம் தன் மக்களை வாழ்வதற்கு அனுப்பியிருக்கிறவள் தமிழ்த்தாய். அருகில் இருக்கும் மக்களைவிட அவளைப் பிரிந்து தொலை தூரத்துக்குச் சென்றிருக்கிறவர்கள்தாம் அவளுடைய அருமை பெருமைகளை நன்றாக உணர்ந்து வாழ்கிறார்கள். இந்த வகையில் தமிழ்த் தாயைப் போல் பெருமைப்படத்தக்க நிலை வேறு யாருக்கும் கிடையாதம்மா என்று அப்பா சமயம் வாய்த்தபோதெல்லாம் கூறுவார். நாட்டுப் பற்றும் மொழிப்பற்றும், குன்றியவர்களை யாழ்ப்பாணத்தாருடனாவது வங்காளிகளுடனாவது ஆறு திங்கள் பழகச் செய்யவேண்டும் என்பார் அப்பா. நாட்டுப் பற்றும் மொழிப்பற்றும் இல்லாமல் சமயம், ஒழுக்கம், பண்பாடு எதிலும் பற்று ஏற்பட இயலாது, என்று பலரிடம் அவர் கடுமையாக வாதங்கள் புரிந்திருப்பதைப் பூரணி அருகிலிருந்து கண்டிருக் கிறாள்.

விமானத்தில் பயணம் செய்து கொண்டே யாழ்ப் பாணத்தையும், தமிழையும், தமிழ்த் தொடர்புடையவர்களையும் நினைக்கும் போது தந்தையின் பண்புகளும் பெருமைகளும் ஒவ்வொன்றாக நினைவு வந்து அவளுக்குத் துணிவு அளித்தன. அடிக்கடி அவள் உள்ளத்தில் உண்டாகும் ஒரு தன் விழிப்புத் தவிப்பு - அது இப்போதும் உண்டாயிற்று. உயரத்தில் விமானமும், விமானத்தில் தானுமாகப் பறந்து கொண்டிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/374&oldid=556097" இலிருந்து மீள்விக்கப்பட்டது