பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 373

பூரிப்பின் ஊடே, தன்னைச் சுற்றி எல்லாமும் எல்லாரும் ஒழுங்காகவும், நிறைவாகவும், இனிமையாகவும் நடைபெற்றுக் கொண்டிருப்பதுபோல் ஒரு திருப்தி அவளுள் பரந்து விரிந்து நிறைந்து நிலைத்துக் கொண்டிருந்தது. பெரிதாகவும் இணை யற்றாகவும் சிறந்ததாகவும் எதையோ நினைக்கவும், பேசவும், செய்யவும் வேண்டும் போல் மனமும் புலன்களும் கிளர்ந்தன. இந்தப் பரவச மனநிலை நீடித்தது. கம்பீரமான இலட்சியக் கனவுகளோடு பறந்து சென்றாள் அவள்.

மங்களேசுவரி அம்மாள் விமானப் பணிப் பெண்ணை அழைத்து ஆங்கிலத்தில் ஏதோ விசாரித்தாள். பூரணி தீவிரமான சிந்தனையில் இருந்ததனால் அந்த அம்மாள் விசாரித்ததைக் கவனமாகக் கேட்க இயலவில்லை.

'இன்னும் சிறிது நேரத்தில் யாழ்ப்பாணத்து விமான நிலை யத்தில் இறங்கிவிடுவோம் பூரணி!" என்று விசாரித்து அறிந்து கொண்ட செய்தியைப் பூரணியிடம் அந்த அம்மாளே கூறினாள். விமானம் சிறிது சிறிதாகக் கீழே இறங்கலாயிற்று. கண்மூடித் திறப்பதற்குள் விரைவாக யாழ்ப்பாணம் வந்து விட்டதைப்போல் பூரணிக்கு வியப்பாக இருந்தது. தமிழ் நாடும் ஈழநாடும் மொழியால்தான் நெருங்கியிருக்கின்றன என்று எண்ணினேன்; இடத்தாலும் நெருங்கியிருக்கின்றனவே என்று அதிசயப்பட்டாள் அவள்.

மங்களேசுவரி அம்மாள் பின் தொடரப் பூரணி விமானத் திலிருந்து கீழே இறங்கினாள். ஆறுமுக நாவலர் தமிழ் மணம் பரப்பிய மண்ணில் இறங்கப் போகிறோம் என்று எண்ணிய போது இறும்பூது கொண்டாள். தமிழ் இலக்கிய விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அவளை வரவேற்பதற்காக விமான நிலையத்துக்கு வந்திருந்தார்கள். ஆண்களும் பெண்களுமாகக் கைகளில் மாலைகளோடு தன்னை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த தமிழன்பர்களின் கூட்டத் தைக் கண்டு மலைத்தாள் பூரணி. 'இவ்வளவு பேர்கள் வந்திருக் கிறார்களே' என்று அவள் மங்களேசுவரி அம்மாளிடம் மெல்லச் சொன்னாள். "இதை விட அதிகமான கூட்டம் வந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, பூரணி! அன்பும், விருந்தோம்பலும், மரியாதையும் உலகத்துக்காகப் பள்ளிக்கூடம் வைத்துச் சொல்லிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/375&oldid=556098" இலிருந்து மீள்விக்கப்பட்டது