பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 381 மங்களேசுவரி அம்மாள். கொழும்பு - செட்டியார் தெருவில் ஒரு நல்ல கடையில் துணிகள் வாங்கிக்கொண்டு திரும்பும் போது, பக்கத்தில் இருந்த கடிகாரக்கடை ஒன்றின் வாயிலில் பூரணி தயங்கி நின்றாள்.

'அம்மா இலங்கையில் மிகவும் தரமான நல்ல கைக்கடி யாரங்கள் எல்லாம் கிடைக்கும் என்று சொல்வார்களே?"

'ஏன்? உனக்கு வேண்டுமானால் பார்க்கலாம் வாயேன்! சிறிதாக அழகாக உன் கையில் ஒரு கடிகாரம் கட்டிக் கொண்டா யானால் நன்றாகத்தான் இருக்கும். வா! நல்லதாக உனக்கு வாங்கித் தருகிறேன்.'

'கடிகாரம் எனக்கு இல்லையம்மா....." 'பின்னே யாருக்கு? இப்படிக் கேட்டு விட்டு மங்களேசுவரி அம்மாள் வியப்புடன் பூரணியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். பூரணியின் முகத்தில் நாணமும் இளநகையும் மலர்ந்தன.

'இத்தனை வயதான பின்பு தேவையும் வசதியும் இருந்தும் கூடக் கைக்கடிகாரம் இல்லாமல் வெறுங்கையோடு இருக் கிறாரம்ம அவர்...... * * - 'ஓ! அரவிந்தனுக்குக் கைக்கடிகாரம் வாங்கிக்கொண்டு போக வேண்டுமென்கிறாயா? அதைச் சொல்வதற்கு இத்தனை கூச்சப்படுவானேன், பூரணி அரவிந்தனுக்கு வாங்கிக் கொண்டு போவதோடு உனக்கும் ஒன்று வாங்கித் தருகிறேன், கட்டிக் கொள்.'

இருவரும் கடிகாரக் கடைக்குள் நுழைந்தார்கள். தனக்குக் கைக்கடிகாரம் தேவையில்லை, அரவிந்தனுக்குக் கொடுப்பதற்கு மட்டும் ஒன்று வாங்கிக் கொண்டால் போதுமென்று பூரணி எவ்வளவோ பிடிவாதமாக மறுத்துப் பார்த்தாள். ஆனால் மங்களேசுவரி அம்மாள் அவளை வெறுங்கையோடு விடவில்லை. அரவிந்தனுக்கும் வாங்கிக் கொண்டு அவளுக்கும் சிறிய லேடீஸ் வாட்ச் ஒன்றை வாங்கி அங்கேயே கையில்கட்டி அழகு பார்த்த பின்புதான் திருப்தி ஏற்பட்டது, அந்த அம்மாளுக்கு. அவர்கள் ஊருக்குப் புறப்படும் தினத்துக்கு முதல்நாள் மாலை கொழும்புத் தமிழன்பர்கள் ஒரு பெரிய விருந்து வைத்து வழியனுப்புதலை விழாவாகவே நடத்தி விட்டார்கள். அந்த விழாவிற்கு யாழ்ப் பாணத்திலிருந்து இராசநாயகம் தம்பதிகளும் வந்திருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/383&oldid=556106" இலிருந்து மீள்விக்கப்பட்டது