பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 387

சிறுசிறு காயங்களுக்கு மருந்து போட்டு முடிக்க ஒருமணிநேரம் கழிந்தது. அதற்குள் ஏறக்குறையப் பொழுது நன்றாக விடிந்து தெருவில் ஆள் நடமாட்டம் ஆகியிருந்தது. அதுவரையில் குதிரை வண்டிக்காரனை இருக்கச் சொல்லியிருந்தான் அரவிந்தன். 'அடிப்பதற்கு வந்த ஆட்களில் எவரையாவது அடையாளம் சொல்ல முடியுமா?' என்று அரவிந்தன் வண்டிக்காரனை விசாரித்ததில் அவன் ஒரு மனிதனை நன்றாக அடையாளம் சொன்னான். அவன் கூறிய அடையாளங்களிலிருந்து அந்த மனிதன் அன்று பர்மாக்காரர் மாளிகையில் அவருடைய ஏவுதல் பெற்றுத் தன்னை அடிக்க வந்த முரடனாகத்தான் இருக்க வேண்டும் என்று அனுமானம் செய்து கொள்ள முடிந்தது அரவிந்தனால், அவன் உள்ளம் அவரைப் பற்றி எண்ணிக் குமுறியது.

'இந்தப் பர்மாக்கார மனிதர் தம்முடைய மனத்தில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார். கெடுதல் செய்வதற்கும் ஒரு எல்லை கிடையாதா என்ன எவ்வளவு தான் பொறுத்துக் கொள்ள முடியும் பச்சை மண் குடத்தில் தண்ணிர் நிரப்பி ஏமாற்ற முயல்கிற மாதிரி சூழ்ச்சியில் வளர்த்த செல்வம் எத்தனை நாள் உடையாமல் இவர் திமிரை வளர்க்கப் போகிறது?"

துணிவாக அவருக்கு முன்னால் போய் நின்றுகொண்டு நீங்கள் மனத்தில் என்ன நினைத்துக் கொண்டு இதெல்லாம் செய்கிறீர்கள்? அடி உதைகளுக்கு ஆட்களை ஏவிப் பயமுறுத் தினால் நாங்கள் தைரியம் இழந்து விடுவோம் என்றுதானே? அப்படிப் பயந்து கொண்டு பூரணியின் தேர்தல் விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்று உங்களுக்குப் போட்டியின்றி விட்டுவிடுவோம் 'ள்ன்று சொப்பனத்தில்கூட நீங்கள் நினைக்க வேண்டாம். நீங்கள் போடுகிற விளம்பர வெளிச்சங்கள் எல்லாம் இல்லாமல் சத்தியத்தின் பலத்திலேயே வெற்றிபெற எங்களால் முடியும். தயவுசெய்து இனிமேலாவது அந்த மாதிரியான அசட்டுத்தனங் களை நிறுத்திவிட்டுப் பெருந்தன்மையாக நடந்து கொள்ளப் பாருங்கள் என்று சொல்விச் சாடிவிட்டு வந்துவிட வேண்டும் போல் துடிப்பு உண்டாயிற்று. ஊரிலுள்ள நல்ல மனிதர்கள் எல்லாம் ஏழையாகிக் கொண்டிருக்கும் போது கெட்ட மனம் படைத்த இந்த மனிதரின் செல்வம் மட்டும் குன்றாமல் பெருகித் தீமைகளைக் குன்று போல் வளர்க்கிறதே என்றும் அரவிந்தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/389&oldid=556112" இலிருந்து மீள்விக்கப்பட்டது