பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 389

சுவரொட்டி ஏற்பாடுகளைக் கவனித்துவிட்டு அப்புறம் வீட்டுக்குப் போகிறேன் என்று மன்றாடினேன். 'கல்யாணம் ஆவதற்குமுன் அதெல்லாம் சரி, நீ பாட்டுக்கு எங்கேயாவது பொதுக் கூட்டத்தில் பேசி விட்டு அதே மேடையில் கூட்டம் கலைந்ததும் மேல் துண்டை விரித்துப் படுத்துத் தூங்கி விட்டுக் காலையில் கண்ணைக் கசக்கிக்கொண்டு எழுந்து வருவாய்? இனிமேல் அதெல்லாம் பலிக்காது, தம்பி மரியாதையாக வீட்டுக்குப் போய்ச் சேர், வசந்தாவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளாதே!' என்று வாயால் அடித்து. என்னை வீட்டுக்குத் துரத்தி விட்டான்' என்று முதல் நாள் நடந்ததையெல்லாம் எண்ணி முருகானந்தம் வருந்தினான்.

சின்னப் பையன்களாகப் போனதினால்தானே ஏணியையும் பசையையும் பறித்துக் கொண்டு அடித்துத் துரத்தி விட்டார்கள். நான் போயிருந்தால் தெரியும்? அத்தனை 'கழுகுகளையும் கையை முறிச்சு அனுப்பியிருப்பேன்! என்று எண்ணிக் கொதித் தான்.

பகல் மணி பனிரெண்டு. அரவிந்தன் இன்னும் திரும்பி வந்து சேரவில்லை. வீட்டிலிருந்து செல்லம், மங்கையர்க்கரசி, சம்பந்தன் மூன்று பேரையும் துரத்தியிருந்தாள் வசந்தா. 'அக்கா உங்களையும் அரவிந்தன் மாமாவையும் சாப்பிடக் கூட்டி வரச் சொன்னாங்க' என்று அவர்கள் வந்து கூப்பிட்ட போது, அரவிந்தன் வந்ததும் கூட்டிக் கொண்டு வருகிறேன், பசித்தால் நீங்கள் எல்லோரும் முதலில் சாப்பிடுங்கள் என்று பதில் கூறி அனுப்பினான் முருகானந்தம். ஒரு மணி சுமாருக்கு அச்சகத்து வாயிலில் குதிரை வண்டி வந்து நின்றது. முருகானந்தம் ஆவலோடு எழுந்து ஓடினான். அதே வண்டிதான். அவர்களுக் கெல்லாம் பழக்கமான அதே வண்டிக்காரன்தான். முகமலர்ச்சி யோடு போய்ப் பார்த்தான் முருகானந்தம்.

ஆனால் என்ன ஏமாற்றம்! வண்டிதான் வந்திருக்கிறது. வண்டிக்குள் யாரும் வரவில்லை. வண்டிக்காரன் முகம் கெட்ட சொப்பனம் கண்டு பயந்ததுபோல் இருந்தது. 'ஐயா ஒன்பது மணிக்கு வண்டியிலிருந்து இறங்கிப் போனவரு. பத்து நிமிஷத்திலே திரும்பி விடுவேன். நீ இருன்னுட்டு போனாரு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/391&oldid=556114" இலிருந்து மீள்விக்கப்பட்டது