பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 குறிஞ்சிமலர் நானும் பதினொண்ணரை வரை காத்துப் பார்த்தேன். இவரு திரும்பவில்லை. எனக்கு என்னென்னமோ சந்தேகமாயிடிச்சி. வண்டியிலேயிருந்து இறங்கி உள்ளே போறப்போ கோபமாப் போனாரு. எனக்கு அந்தக் தோட்டத்தையும் பேய் குடியிருக் கிறாற் போலத் தனியாகப் பெரிய அரண்மனை மாதிரி மாளிகை யும் பார்க்கவே நல்லாப் படலீங்க. பயந்துக்கிட்டே உள்ளே போய் 'வண்டியிலே சவாரி வந்தவரு இன்னும் திரும்ப வில்லை. திரும்பி வருவேன், இருன்னாரு, நான் போவலாமா'ன்னு கேட்கணும்னேன். 'அதெல்லாம் யாரும் வரலை. நீ போக லாம்’னு அங்கு நிற்கவே விடாம துரத்தியடிச்சாங்க. அந்தப் பங்களா வாசல்லே ஒரு தடி ஆளு நின்னான். அவனைப் பார்த்தா நேத்து ராத்திரி நம்ம ஆளுகளை அடிக்க வந்தவன் மாதிரி இருந்ததுங்க' என்று ஒடுங்கிய குரலில் முருகானந்தத்திடம் கூறினான் வண்டிக்காரன்.

அதைக் கேட்கக் கேட்க முருகானந்தத்தின் முகம் கடுமையாகிக் கொண்டு வந்தது. அவனது கைவிரல்கள் குவிந்து யாரையோ பலமாகக் குத்தப்போகிறமாதிரி முட்டி எலும்புகளும் மணிக்கட்டும் நரம்புகளும் புடைத்துத் தோன்றின. 'அப்படியா சேதி பர்மாக்காரப் பயலுக்கு அத்தனை துணிச்சலா பார்க்கிறேன் ஒரு கை' என்று கூறி விட்டு மடக்கிக் குவித்த வலதுகையை இடது உள்ளங்கையில் ஓங்கிக் குத்திக் கொண்டான் முருகானந் தம். அப்போது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதுபோல் சினத்தோடு வசந்தா காரில் வந்து இறங்கினாள். "நீங்க இருவரும் சாப்பிட வரப் போகிறீர்களா இல்லையா?" என்று அரவிந்தனும் அங்கே இருப்பதாகவே நினைத்துக் கொண்டு கேட்டாள் வசந்தா.

சாப்பிடுவதைவிட முக்கியமான காரியம் எல்லாம் இருக்கிறது. இப்போது! தொந்தரவு செய்யாமல் வீட்டுக்குப் போய்ச் சேர்!' - அவளிடம் எரிந்துவிழுந்தான் அவன். அவள் பதில் பேசாமல் திரும்பி விட்டாள். முருகானந்தம் தன்னுடைய தையற்கடைக்கு விரைந்தான். பொன்னகரம், அழகரடி ஆகிய பகுதிகளில் உள்ள குஸ்திப் பள்ளிக்கூடங்களையும் பயில்வான் களையும் முருகானந்தத்துக்குத் தெரியும். அவனுக்காக எதையும் செய்யக் கூடியவர்கள் அவர்கள். தனது தையற்கடையிலுள்ள நம்பிக்கையான பையன் ஒருவனைக் கூப்பிட்டு அழகரடிக்கும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/392&oldid=556115" இலிருந்து மீள்விக்கப்பட்டது