பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 குறிஞ்சிமலர் திடம் சிக்கிக்கொண்டான். 'வன்முறைச் செயல்களில் தான் இறங்கினால் அரவிந்தனுக்கோ பூரணிக்கோ அதனால் பெருமை குறைய நேரிடலாம்' என்று நிருபர் பாண்டியன் எச்சரித்திருந்த தெல்லாம் உணர்வு மயமான அந்த நேரத்தில் முருகானந்தத்துக்கு மறந்தே போய் விட்டது. கழுகுச்சின்னம் ஆட்களில் தப்பி ஒடினவர்களைத் தவிர அகப்பட்டுக் கொண்ட ஒருவனை நான்கு மணியிலிருந்து ஐந்து மணிவரை கசக்கிப் பிழிந்து பயமுறுத்தியும் துன்புறுத்தியும் பார்த்ததில் அவன் அவர்களுக்கு ஒரு முக்கியமான இரகசிய உண்மையைச் சொல்லிவிட்டான். சொல்லும் நிலை மைக்கு அவனைக் கொண்டு வந்துவிட்டார்கள் அவர்கள். விடிந்தால் நிருபர் பாண்டியன் கேட்டு வாங்கிச் சென்றிருந்த செய்தி பத்திரிகையில் வந்துவிடும். அந்தச் செய்தியைப் பார்த்தே தன் குட்டு வெளியாகிவிடுமோ என்று பயந்து பர்மாக்காரர் தாமாகவே அரவிந்தனை அனுப்பிவிடுவார் என்று பாண்டியன் கூறியிருந்தார்.

ஆனால் விடியுமுன்பே அரவிந்தனைக் கண்டுபிடித்து அழைத்துச் செல்லும் நல்வாய்ப்பை அவர்களுக்கு உண்டாக்கித் தந்துவிட்டான் அகப்பட்டுக்கொண்ட கோழை மனிதன்.

வைகை நதியின் கரையில் செல்லூர் - திருவாய்ப் புடையார் கோவில் தெருவில் புது மண்டபத்து மனிதர் புத்தகங்கள் ஸ்டாக்" வைத்திருக்கிற கிடங்கு ஒன்று உண்டு. பெரிய மாடி வீடு அது. புது மண்டபத்துக் கடை சிறிதாதலால் ஏராளமான அச்சடித்த பழைய புதிய புத்தகங்களை ஸ்டாக் வைக்கத் தமது செல்லூர் வீட்டைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். புது மண்டபத்து மனிதர் வீடும் தனியாக ஆளரவமற்ற பகுதியில், கோடியில் அமைந்திருந்தது. அதனால் இந்த செல்லூர் வீடு புத்தகங்களுக்கு மட்டும் அல்லாமல் புது மண்டபத்து மனிதரின் அக்கிரமங்களுக் கும் 'ஸ்டாக் ஹவுஸ்ாக இருந்து வந்தது. அரவிந்தன், பர்மாக்காரர் மாளிகையில் அவரைச் சந்திக்கச் சென்று காணாமற் போன அன்றே காரில் வைத்துக் கொண்டு வந்து இந்த வீட்டில் ஒர் அறையில் தள்ளிப் பூட்டியிருப்பதாக உண்மையைச் சொல்லி விட்டான், முருகானந்தத்திடம் அகப்பட்டுக் கொண்ட ஆள்.

"நீயே நேரில் வந்து வீட்டைக் காட்டு அப்பனே. நீ சொல்வது பொய்யாயிருந்தால் உன் முதுகுத் தோலை உரித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/398&oldid=556121" இலிருந்து மீள்விக்கப்பட்டது