பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 குறிஞ்சிமலர்

கலந்துகொண்டு கொடுத்து அனுதாபம் சேர்க்கத் தெரியாத கருமி அவன். தன்னுடைய சுகங்களை எல்லாரும் பங்கிட்டுக் கொள்ள விடுகிற வள்ளல் அவன். துன்பங்களைப் பிறர் கேட்டு அறிந்து கொள்ள வரும்போது மட்டும் கருமியாக மாறிவிடுவான். அவனுக்குச் சிறு வயதிலிருந்தே பழக்கமான பண்பு அது.

அரவிந்தனை அச்சகத்தில் இருக்கச் சொல்லிவிட்டுச் சிறிது நேரத்தில் திரும்பி வந்து சந்திப்பதாகக் கூறி வெளியேறினான் முருகானந்தம். அரவிந்தனின் மனம் அப்போது தீவிரமான சிந்தனையில் இருந்தது. நியாயம் கேட்பதற்காக அமைதியான முறையில் சென்ற தன்னைப் பர்மாக்காரரும் புது மண்டபத்து மனிதரும் என்னென்ன விதமாக வேதனைப்படுத்தினார்கள் என்பதை நினைத்துப் பார்த்தபோது, 'உலகத்தில் இனிமேல் சத்தியத்துக்கும் நேர்மைக்கும் இடமே இல்லையோ?" என்கிற அளவு இதயம் புண்பட்டு வருந்தினான் அவன். தன்னை வெளியேறவிடாமல் வீட்டுக்குள் அடைத்துப் போட்டுக் கொண்டு நான்கைந்து பேர்களாகச் சேர்ந்து அவர்கள் படுத்திய கொடுமை களையெல்லாம் முருகானந்தத்திடமோ மற்றவர்களிடமோ சொல்ல விரும்பவில்லை அவன். ஆனால் நீறுபூத்த கனலைப் போல் உள்ளேயே குமுறினான்; எண்ணி எண்ணிப் புழுங்கலானான்.

'கொள்ளைக் கூட்டத்து நடைமுறைகளைப் போல் அரசியல் எவ்வளவு ஒழுங்கற்றதாக இருக்கிறது இங்கே? யாதும் ஊரே! யாவரும் நண்பரே! தீமையும் நன்மையும் பிறரால் இல்லை. துயரமும் இன்பமும் பிறர் காரணமாக ஏற்படுவதில்லை. வாழ்வும் சாவும் நியதிகள். இன்பக் காலத்தில் துள்ளித் திரிவதும், துயரக்காலத்தில் துவண்டு கிடப்பதும் அற்ற ஒருமை நிலைதான் சிறந்த வாழ்வு' என்று தத்துவம் கண்டு வாழ்ந்த தமிழகத்திலா இன்று இப்படி வாழ்கிறோம். எத்தனை பொறாமைகள் எத்தனை காழ்ப்புக்கள்? அடுத்தவர்களைக் கவிழ்க்க முயல்வதில் எவ்வளவு இன்பம் இவர்களுக்கு? பண்பாட்டையும் ஒழுக்க நேர்மை களையும் வளர்ப்பதற்குப்பதிலாக அரசியல் கட்சிகள் இந்த நாட்டு மக்களை எவ்வளவு கெட்ட வழிகளுக்கு இழுத்துப் போகின்றன? பிழைத்துக் கிடந்தால் பூரணி, சத்தியத்தின் பலத்தால் ஆடம்பர விளம்பரங்களும் ஆவேசப் பேச்சுக்களும் இல்லாமலே தேர்தலில் வெற்றி பெறுமாறு செய்து மற்றவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/402&oldid=556125" இலிருந்து மீள்விக்கப்பட்டது