பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 குறிஞ்சிமலர்

முழுத்தாளில் துப்புரவாக டைப் செய்திருந்த அந்தச் செய்தியை முருகானந்தத்திடம் கொடுத்தார் பாண்டியன்.

அதை ஒவ்வொரு வரியாகக் கருத்துன்றிப் படித்தான் அவன். "பூரணியின் தாமரைப்பூ சின்னத்துச் சுவரொட்டிகளை ஒட்டு வதற்கு வந்த ஆட்கள் ஏற்கனவே ஒட்டப்பட்டிருந்த தமது கழுகுச் சின்னம் சுவரொட்டிகளை மறைத்தும் கிழித்தும் வம்பு செய்ததா கவும், அப்படிச் செய்ததைக் கண்டிக்க வந்த தம் ஆட்களை அடித்தும், உதைத்தும் காயப்படுத்தியதாகவும் அறிக்கையில் கூறியிருந்தார் புதுமண்டபத்து மனிதர். மேலும், செல்லூர் திருவாய்ப்புடையார் கோவில் தெருவிலுள்ள தமது ஸ்டாக் ஹவு சைப் பூரணியின் ஆட்கள் வன்முறைச் செயல்களால் பூட்டை உடைத்துத் திறந்து புத்தகங்களையும், பிற பொருள்களையும் கொள்ளையடித்துக் கொண்டு போய் விட்டதாகவும் அந்தச் செய்தியில் அவர் விவரித்திருந்தார். வன்முறைச் செயல்களைச் செய்தவர்களின் பெயர்களாக அவர் கொடுத்திருந்த பட்டியலில் வேண்டுமென்றே முருகானந்தத்தின் பெயர் பெரிதுபடுத்தப் பட்டிருந்தது. ஸ்டாக் ஹவுஸ் கொள்ளையிடப்பட்டதற்கு முதல் நாள் காலை அரவிந்தன் பர்மாக்காரர் எஸ்டேட்டுக்கு வந்து தன்னைச் சந்தித்துக் கன்னாபின்னா வென்று பேசிப் பயமுறுத்தியதாகவும் ஒரு பொய்ச் செய்தி திரித்துக் கொடுக்கப் பட்டிருந்தது.

இதைப் படித்துவிட்டு முகத்தில் சினம் துடிக்க நிமிர்ந்தான் முருகானந்தம். அவன் பார்வையில் ஆத்திரமும் படபடப்பும் தெரிந்தன. நிருபர் பாண்டியனை நோக்கிக் கேட்கலானான்.

'இந்தச் செய்தி அறிக்கையை இப்படியே நீங்கள் வெளியிடப் போகிறீர்களா பாண்டியன்?"

'என்னைக் கேட்டால் நான் என்னப்பா பதில் சொல்ல முடியும்? நேற்றைக்குத் தேர்தல் பகை காரணமாக இளைஞர் கடத்தப்பட்டார் என்று நீ எழுதிக் கொடுத்த செய்தி அறிக்கையை நான் வெளியிடவில்லையா? நீ கொடுத்த செய்தி மெய் என்று எனக்குத் தெரிந்து நானே உன்னிடம் கேட்டு வாங்கிக் கொண்டது. இப்போது இவர் கொடுத்திருக்கும் செய்தி பொய்' என்று எனக்குத் தெரிகிறது. தெரிந்தும் நான் ஒன்றும் செய்வதற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/406&oldid=556129" இலிருந்து மீள்விக்கப்பட்டது