பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 குறிஞ்சிமலர்

முடிகிறவரை என்னுடைய தொந்தரவு இருக்காதென்று நினைக் கிறார் பர்மாக்காரர். இல்லாவிட்டால் செல்லுரர் வீட்டுக்குள் நுழைந்து அடைபட்டுக்கிடந்த அரவிந்தனை மீட்டுவந்த நிகழ்ச்சியைத் திரித்து நான் என் ஆட்களோடு கொள்ளையிட வந்தேனென்று வல்வழக்குத் தயார் செய்வாரா?'

"பதற்றமடையாதே முருகானந்தம் பர்மாக்காரனின் இந்தச் சூழ்ச்சி பலிக்காமல் போகும்படி செய்வதற்கும் ஒரு வழி இருக்கிறது. பத்திரிகையில் அறிக்கை விடுகிற தகுதி அவர் களுக்குத்தான் உண்டு என்பதில்லையே? உன்னுடைய தகுதி என்ன குறைவு? நீயும் தொழிற்சங்கங்களின் தலைவன்; தொழிலாளர்களின் மதிப்புக்குரியவன். பர்மாக்காரர் அரவிந்தனைக் கடத்திக் கொண்டு போய்த் துன்புறுத்தியதையும் செல்லூர் வீட்டில் சிறை வைத்ததையும் பற்றி நீயும் விரிவாக ஓர் அறிக்கை எழுதிக் கொடு; உன் அறிக்கையை அவர்களிடம் எடுத்துச் சென்று காண்பித்து வெளியிடப் போவதாகச் சொல்லி மெல்ல மிரட்டிப் பார்க்கிறேன். அப்படிச் செய்தால், "இரண்டு அறிக்கைகளையுமே வெளியிட வேண்டாம். பேசாமல் விஷயத்தை அப்படியே அமுக்கி விடுங்கள்' என்று அவர்களே எங்கள் ஆசிரியருக்கு "டெலிபோன் செய்து தடுத்துவிடுவார்கள்!"

'நீங்கள் எதிர்பார்க்கிறபடி நடைபெறாமல் பர்மாக்காரரின் செல்வாக்குக்குப் பயந்து உங்கள் ஆசிரியர் அவர்களுடைய அறிக்கையை மட்டும் வெளியிட்டுவிட்டால்?"

'வெளியிடமாட்டார். அதற்கானதை எடுத்துச் சொல்வது என் பொறுப்பு' -

முன்புறத்து அறையில் அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது நீராடி உடை மாற்றிக் கொண்டு தூய தோற்றத்தோடு அரவிந்தன் வந்தான். 'அரவிந்தன் ஏற்கனவே மிகவும் மனவேதனைப்பட்டுப் போயிருக்கிறான். இதில் ஒன்றையும் அவன் காதில் போட வேண்டாம் என்று பின் புறமிருந்து அரவிந்தன் வருகிற காலடி ஓசை கேட்டதுமே, பாண்டியனிடம் மெதுவான குரலில் கூறி எச்சரித்திருந்தான் முருகானந்தம். உள்ளே வந்த அரவிந்தன் அவர்கள் இருவருக்கும் நடுவில் அமர்ந்து கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/408&oldid=556131" இலிருந்து மீள்விக்கப்பட்டது