பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 407

"பூரணி எப்போது இலங்கையிலிருந்து திரும்புகிறாள்?" என்று அரவிந்தனை நோக்கிக் கேட்டான் பாண்டியன்.

'திரும்புகிற சமயம்தான்! இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அவள் திரும்பி விடுவாள்.'

'நீங்கள் எது நடந்தாலும் கவலையோ சோர்வோ அடையக் கூடாது அரவிந்தன் தேர்தல், அரசியல் போட்டி என்று வரும்போது இந்த நாளில் இவையெல்லாம் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றன. பூரணி திரும்பி வந்து நான்கு கூட்டங்களில் பேசினால் போதும்; இந்தத் தொகுதியில் அவளுக்குத்தான் வெற்றி என்பதில் சந்தேகமே இல்லை."

'நியாயத்திலும், நேர்மையிலும் நம்பிக்கையிருந்தால் பூரணியைத் தேர்ந்தெடுக்கட்டும். அதற்காக ‘என்னைத் தேர்ந்தெடுங்கள். எனக்கே வாக்களியுங்கள் என்று இனிப்பு மிட்டாய்க்கு அடித்துக்கொண்டு பறக்கிற சிறுபிள்ளை மாதிரி அவள் கூட்டம் கூட்டமாக, மேடை மேடையாக வந்து கதற மாட்டாள். இலங்கையிலிருந்து திரும்பி வந்ததுமே சில நாட்களில் கல்கத்தாவில் நடைபெற இருக்கும் கிழக்கு ஆசியப் பெண்கள் மகாநாட்டுக்கு அவள் போக வேண்டும். கல்கத்தாவி லிருந்து திரும்பியதும் மலேயாவில் சில வாரங்கள் சுற்றுப்பயணம் செய்யப் போகவேண்டும். தேர்தலை ஒரு வியாபாரமாகக் கருதி அதற்காக முதல்போட்டுச் செலவழித்து அலைய அவளுக்கு நேரமில்லை. நானும் அதை வியாபாரமாக நடத்த விரும்ப வில்லை' என்று நிருபர் பாண்டியனிடம் சுடச்சுடப் பதில் கூறினான் அரவிந்தன்.

'நீங்கள் சொல்வதெல்லாம் உயர்ந்த இலட்சியம் தான். ஆனால் உங்களை எதிர்த்து நிற்பவர் பணபலமும், ஆள் பலமும் சூழ்ச்சிகளும் உள்ளவராயிற்றே!'

'மனித உரிமைகளும், சமத்துவமும் உருவாகிற சமுதாயத் திலே பணத்துக்கென்று தனிப்பலமே இருக்கக்கூடாது. அதிக ஏழைமையைப் போல தனித்தனி மனிதர்களிடம் அதிகச் செல்வம் தேங்கி விடுவதும் நாட்டுக்கு ஒரு பெரிய நோய்; மனித உடம்பு முழுவதும் சதைப்பற்று இருந்தால், வளமான உடல் என்கிறோம். உடலில் பல பகுதிகள் இளைத்து எங்காவது சில இடங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/409&oldid=556132" இலிருந்து மீள்விக்கப்பட்டது