பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 () குறிஞ்சிமலர் விமானம் சென்னைக்குப் போய்ச் சேர்ந்ததும் இறங்கி (டிரங்க் டெலிபோனில்) வெளியூர்த் தொலைபேசி மூலம் மதுரையைக் கூப்பிட்டுப் பேசுவோம். விவரம் தெரிந்துவிடும். இது நாலு நாளைக்கு முந்திய செய்தித்தாள். ஒரு வேளை இதற்குள் அரவிந்தன் மீண்டும் வந்தாலும் வந்திருக்கலாம். என் மாப்பிள்ளை ஒரு விநாடி கூடச் சும்மா இருக்கமாட்டார். ஏதாவது செய்து இதற்குள் அரவிந்தனை மீட்டுக்கொண்டு வந்திருப்பார்' என்று மங்களேசுவரி அம்மாள் பூரணிக்கு ஆறுதல் கூறினாள்.

கொழும்பிலிருந்து புறப்படும்முன்பே சென்னையிலிருந்த தன் உறவினர்க்குத் தந்தி மூலம் தங்களது வரவு பற்றி அறிவித்திருந்தாள் மங்களேசுவரி அம்மாள். அதனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு அந்த அம்மாளின் உறவினர்கள் காருடன் வந்து காத்திருந்தனர். சுங்கப் பரிசோதனை முடிந்து உறவினர்களுடன் பூரணியையும் அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டுக்குச் சென்றாள் மங்களேசுவரி அம்மாள். உறவினர்கள் வீட்டில் தொலைபேசி இருந்தது. அங்கிருந்து மதுரையில் தன் வீட்டுத் தொலைபேசி எண்ணுக்கு அவசரமாகப் பேசுவதற்கு முயன்றாள் அந்த அம்மாள். பூரணி துடிப்பும் தவிப்புமாக விவரம் அறிந்துகொள்ளும் ஆவலோடு மங்களேசுவரி அம்மாளின் அருகிலேயே நின்றுகொண்டிருந்தாள். கால் மணி நேரத்தில் மதுரை எண்ணுடன் தொலைபேசித் தொடர்பு கிடைத்துவிட்டது. மதுரையிலிருந்து வசந்தா பேசினாள். கொழும்பிலிருந்து விமானத்தில் வரும்போது செய்தித்தாளில் படித்த செய்தியைப்பற்றிக் கூறி விவரம் கேட்டாள் மங்களேசுவரி அம்மாள். வசந்தாவிடமிருந்து கேட்ட மறுமொழியால் மங்களேசு வரி அம்மாளின் முகம் மலர்ந்தது. அருகில் இருந்த பூரணியின் மனத்தில் அதைக் கண்டதும் நம்பிக்கை மலர்ந்தது. வசந்தா சிறிது நேரம் பேசிவிட்டு "இதோ பக்கத்தில் உங்கள் மாப்பிள்ளையே வந்து நிற்கிறார். அம்மா! அவரிடம் விவரமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!' என்று தொலைபேசியை முருகானந்தத்தின் கையில் கொடுத்து விட்டாள். முருகானந்தம் நடந்தவற்றை மிகச் சுருக்கமாக மாமியாருக்குத் தெரிவித்தான். நீங்கள் தான் நாளைக் குக் காலையில் இங்கே மதுரைக்கு வந்துவிடப் போவதாகக் கூறினீர்களே, மற்றவற்றை நேரில் பேசிக் கொள்ளலாம். காலையில் திருவனந்தபுரம் எக்ஸ்பிரசுக்கு நானும் அரவிந்தனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/412&oldid=556135" இலிருந்து மீள்விக்கப்பட்டது