பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 411

இரயில் நிலையத்துக்கு வருகிறோம்.... அவ்வளவுதானே? வைத்து விடட்டுமா?' என்று முருகானந்தம் பேச்சை முடித்துவிட்டுத் தொலைபேசியை வைக்க இருந்தபோது, "இதோ பூரணி பக்கத்தில் கவலையோடு நிற்கிறாள். நான் சொன்னால் நம்புவாளோ மாட்டாளோ? அரவிந்தன் திரும்பி வந்துவிட்டான்' என்று நீங்களே அவளிடம் போனில் ஒரு வார்த்தை சொல்லி விடுங்கள், மாப்பிள்ளை' என்றாள் மங்களேசுவரி அம்மாள். பூரணி தொலைபேசியைக் கையில் வாங்கிக் கொண்டாள். பூரணியிடம் 'அக்காவுக்கு வணக்கம்! இலங்கைப் பயணம் எல்லாம் சுகமாயிருந்ததோ? இங்கே வசந்தா மிகவும் பொல்லாதவள் ஆகிக்கொண்டு வருகிறாள். திருமணத்துக்குப்பின் ஒரே அடக்குமுறை ஆட்சியாக இருக்கிறது அக்கா எனக்குச் சுதந்திரமே இல்லை' என்று சிரித்துக் கொண்டே முருகானந்தம் பேசியபோது இடையில் ஒரு கணம் போன்' அவன் கையிலிருந்து மாறி, 'இவர் சொல்வதெல்லாம் சுத்தப்பொய் அக்கா, கிண்டல் செய்கிறார்' என்று வசந்தாவின் நாணம் விரவிய மென் குரல் ஒலித்தது. மீண்டும் முருகானந்தம் பேசினான். 'அரவிந்தன் சுகமாக இருக்கிறான், உங்களுக்கு ஒரு கவலையும் வேண்டாம். காலை எக்ஸ்பிரசில் உங்களை எதிர்பார்க்கிறோம், புறப்பட்டு வந்து சேருங்கள்' என்று அவன் உறுதி கூறிய பின்பே பூரணியின் மனம் நிம்மதியை முழுமையாக அடைந்தது. தவிப்பும் கவலைகளும் குறைந்தன.

சென்னையில் அவர்கள் தங்கியிருந்த உறவினர் வீடு மயிலாப்பூர் பகுதியில் இருந்தது. அரவிந்தன் திரும்பி வந்து விட்டான். சுகமாக இருக்கிறான்' என்ற செய்தி தெரிந்ததும் மங்களேசுவரி அம்மாளையும் அழைத்துக் கொண்டு மயிலைக் கபாலீசுவரர் கோவிலுக்குச் சென்று கற்பகாம்பிகைக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு விட்டு வந்தாள் பூரணி. அன்று மாலை திருவனந்தபுரம் விரைவு வண்டியிலேயே அவர்கள் சென்னை யிலிருந்து மதுரைக்குப் புறப்பட்டு விட்டார்கள். இரயிலில் வரும்போது அரசியல் நிலைகளையும் அதிலுள்ள வம்புகளையும் பற்றிக் கதை கதையாகச் சொல்லிக் கொண்டு வந்தாள் மங்களேசுவரி அம்மாள். 'இன்று இந்தத் தேசத்தில் ஆன்மிக எழுச்சி இல்லை. கவிதைகளும் காவியமும் உருவாகிற இலக்கிய எழுச்சியும் இல்லை. மூடப் பழக்க வழக்கங்களைப் போக்கித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/413&oldid=556136" இலிருந்து மீள்விக்கப்பட்டது