பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 குறிஞ்சிமலர் அரவிந்தனை மாடிக்கு அழைத்துப் போனாள். பூரணி மாடியில் முன் வராந்தாவிலேயே இருந்தாள். அவள் கைகள் பின்புறம் எதையோ ஒளித்து வைத்துக் கொண்டிருந்தன.

"கூப்பிட்டாயாமே?' என்று சிரித்துக்கொண்டே அவள் முன் போய் நின்றான் அரவிந்தன். அவளும் சிரித்தாள்.

'தயவு செய்து உங்கள் கையை நீட்டுங்கள்' என்றாள் பூரணி. “எதற்காக?" 'நீட்டுங்களேன், சொல்லுகிறேன். ' அரவிந்தன் கையை நீட்டியவாறே சிரித்தபடி நின்றான். அவள் அவனுடைய பொன் நிறமுள்ள கையில் புதிய தங்கக் கடிகாரத்தைக் கட்டினாள். 'காலத்தை உங்கள் கையில் கட்டி ஒடச் செய்து விட்டேன்."

'தவறு பூரணி, நாம் மனிதர்கள் காலத்தின் கையில் கட்டுண்டு ஒடுபவர்கள்' என மறுமொழி கூறி அழகாக நகைத்துக் கொண்டே அவள் முகத்தைப் பார்த்தான் அரவிந்தன்.

33

மாட்சியிற். பெரியோரை வியத்தலும் இலம்ே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

இன்னாது அம்ம இவ்வுலகம் இனிய காண்(க) இதன் இயல்புணர்ந்தோரே!

-புறநானூறு-192-193 மதுரை திரும்பியதும் ஒரு வாரம் பூரணிக்கு ஒய்வே இல்லை. விருந்துகளும், பாராட்டுக்கூட்டங்களும், ஒன்றன்பின் ஒன்றாக இருந்தன. இலங்கைப் பயண அனுபவங்கள் பற்றி மங்கையர் கழகத்தில் அவள் சில சொற்பொழிவுகள் செய்தாள். ஒரு திங்கட்கிழமை மாலையில் மங்களேசுவரி அம்மாள் முதலிய எல்லோருடனும் திருப்பரங்குன்றம் போனாள் பூரணி. கோவிலில் சோமவார தரிசனம் முடிந்த பின் ஒதுவார்க் கிழவர் வீட்டுக்குப் போய்ச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். ஓதுவார் வீட்டுப் பாட்டி பூரணியிடம் பலமுறை கேட்டுக் கேட்டு அலுத்துப்போன அந்தக் கேள்வியை இம்முறை மங்களேசுவரி அம்மாளிடம் கேட்டாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/416&oldid=556139" இலிருந்து மீள்விக்கப்பட்டது