பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 குறிஞ்சிமலர் 'உனக்கென்ன அம்மா கல்கத்தாவுக்குப் போவாய்; அமெரிக்காவுக்குப் போவாய். எங்களையெல்லாம் போலவா நீ? தேர்தலுக்குக்கூட நிற்கிறாய் என்று கேள்விப்பட்டேன். தேர்தலில் வெற்றிபெற்று மந்திரியாக வந்தாலும் வருவாய். அப்படி யெல்லாம் வந்தால் எங்களை மறந்துபோய் விடாதேயம்மா என்று சிரித்துக் கொண்டே கூறினாள் கமலா.

சாதாரணமாகச் சிரித்துக் கொண்டுதான் அவள் இப்படிக் கூறினாள். ஆனால் பூரணியின் செவிகளில் சிந்தனையைக் கிளறும் விதத்தில் ஒலித்து உள்ளத்தில் பதிந்து கொண்டன. இந்தச் சொற்கள். எல்லாப் பெண்களையும் போல் சர்வ சாதாரணமாக வாழாத காரணத்தாலேயே தன்னையறியாமலே தான் பலருடைய உள்ளங்களில் பெருமையையும், பெருமையோடு கலந்த பொறாமையையும் உண்டாக்கிக் கொண்டு வருகிறோமோ? என்று ஒரு கணம் பொறுத்துக் கொள்ள முடியாத சந்தேகம் பூரணியின் மனத்தை வாட்டியது. 'உயரத்தில் இருப்பவர்கள் தகுதியுடையவர்களாக நல்லவர்களாக இருந்தபோதிலும், அவர்கள் உயரத்தில் இருக்கிறார்களென்ற ஒரே காரணத்தால் கீழேயிருக்கிற அத்தனை பேருடைய கண்களும் அவர்கள்மேல் பட்டுக்கொண்டிருக்கிறதென்பதை உணர்கிற நிலை பூரணிக்கும் அப்போது ஏற்பட்டது. இரண்டு உயிர்கள் சேர்ந்து மூன்றாவது உயிரை உண்டாக்குகிற வாழ்வுக்குத்தான் உலகம் முழுவதும் அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவசரப்படுத்துகிறது. ஒதுவார் வீட்டிலும், கமலாவின் வீட்டிலும் தன்னைச் சந்தித்த கண்களில் தன்னோடு பேசிய வாய்களில் தன்னை நினைத்த உள்ளங்களில் இந்த அவசரம் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் வற்புறுத்தப்படுவதை அவள் புரிந்து கொள்ளத்தான் வேண்டி யிருந்தது. எப்படியெல்லாமோ இலட்சிய வாழ்வு வாழத் திட்ட மிட்டுக் கொண்டிருந்தது அவள் மனம். அப்படியெல்லாம் கனவுகள் காணாதே, இப்படித்தான் வாழவேண்டும், இப்படி வாழ்வதுதான் வழக்கம். இப்படித்தான் எல்லோரும் வாழ் கிறார்கள் என்று உலகம் சமயம் வாய்க்கும்போதெல்லாம் அவளுக்கு நினைவு படுத்திக் கொண்டிருந்தது. அவளுடைய அரவிந்தனோ, 'உடம்பால் வாழ்கிற வாழ்வுக்கு இப்போது அவசரமில்லை, இன்னும் சிறிது காலத்துக்கு எங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/418&oldid=556141" இலிருந்து மீள்விக்கப்பட்டது