பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/421

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 419

கெளரவம் என்னவோ போல், ஏற்றுக்கொள்ள அருவருக்கும் விதத்தினதாகப்பட்டது பூரணிக்கு. இப்போது அவளை எங்கே சந்தித்தாலும் யார் சந்தித்தாலும், தேர்தலைப் பற்றியும் அரசிய லைப் பற்றியுமே பேசினார்கள். சந்திக்கிறவர்கள் தேர்தலையும் அரசியலையும் விட்டு வேறு ஏதாவது மனம் நெகிழ்ந்து பேச மாட்டார்களா என்று அவளே ஏங்கும் படியாகி விட்டது.

ஒன்று அரசியலைப் பற்றிப் பேசினார்கள். அல்லது திருமணத்தைப் பற்றி நினைவு மூட்டினார்கள். உறக்கம் வந்து விட்டாலும் இந்த நினைவுகளை மறக்கலாம். ஆனால் உறக்கம் கண் இமைகளில் வந்து கலக்கவில்லை. மனிதர்களின் நினைவு கள் தான் கண் இமைகளுக்கு முன்னே வந்து அவளைக் கலக்கியது. அரவிந்தன் தோன்றி, எண்ணங்களில் வாழும் வாழ்வுக்கு அழிவில்லை. இன்னும் சிறிது காலத்துக்கு எண்ணங்களிலேயே வாழலாம் என்கிறான். ஓதுவார் வீட்டுப் பாட்டியும், கமலாவின் தாயும், மங்களேசுவரி அம்மாளும் தோன்றி எண்ணங்களால் வாழ்வதெல்லாம் உலகத்துக்குத் தெரியாது உலகம் ஒப்புக் கொள்கிற மாதிரி வாழுங்கள் என்று அழுத்திச் சொல்கிறார்கள். அவள் கண்களில் இருபுறமும் உருவெளியில் தோற்றங்கள். நீண்ட நாழிகைத் தவிப்புக்குப் பின் மெல்லத் தளர்ந்து உறங்கிய போது, அவள் ஒரு கனவு கண்டாள். மேக மண்டலத்தின் உயரத்துக்கு வளர்ந்து வீறெய்தி நிற்கும் ஒரு பெரிய மலைச் சிகரத்தில் அவள் நிற்கிறாள். தூய பஞ்சுப் பொதிகள் போல் குவிந்திருந்த மேகங்களையே எட்டுகிறவரை; கொய்தெடுத்து இடையில் சுற்றி உடுத்திக் கொண்டது போல் வெண்துகில் உடுத்து நிற்கிறாள். சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அந்த மலைமேனியெல்லாம் நீலநிறப் பூக்கள் தேன்துளி சிவிர்க்கப் புது மலர்ச்சி கொண்டு இலங்குகின்றன. அந்தப் பூக்களை எங்கோ எப்போதோ பலமுறை பார்த்திருப்பது போல் ஒரு ஞாபகம் நெஞ்சடியில் முறிமுள்ளாய் உறுத்துகிறது. அந்த உயரத்திலிருந்து காணும் போது கீழே மண்ணுலகம் சிறியதாய் இருண்டதாய்ச் சீவனற்றுத் தெரிகிறது. மேலிருந்த படியே அந்த உயரத்தில் நின்று கொண்டு பூக்களைத் தூவுவது போல கீழே இருண்டிருக்கும் உலகத்துக்கு இரண்டு கைகளும் நிறைய ஒளியை அள்ளித் தூவ வேண்டும்போல் அவளுக்கு ஆசையாக இருக்கிறது கைகளில் ஒளிப்பூக்களைப் போல் அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/421&oldid=556144" இலிருந்து மீள்விக்கப்பட்டது