பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 421

புண்பட்டது. வருந்தி வாடியது. பொறுக்க இயலாமல் உள்ளுக் குள்ளேயே தவித்தான் அவன்.

அன்று காலை வழக்கம்போல் அச்சக வேலைகள் தொடங்கி நடந்துகொண்டிருந்தன. அரவிந்தன் அறையில் ஊரிலிருந்து சிற்றப்பாவின் நிலங்களை விற்று அவன் கொணர்ந்திருந்த தொகையில் தேர்தலுக்காக முதலில் செலவழித்த சிறிய பகுதி தவிர எஞ்சியதெல்லாம் அச்சகக் கடன்களை அடைக்கவும் புதிய எந்திரங்கள் வாங்கவும் செலவிடப்பட்டிருந்தது. அவன் அப்படித் தன் பணத்தைச் செலவிட்டு நிலைமையைச் சரிக்கட்டியிருக்கா விட்டால் அச்சகநிர்வாகம் கடனில் மூழ்க நேரிட்டிருக்கும். அது நேரிடாமல் காப்பாற்றி விட்ட பெருமிதத்தோடு வரவு செலவுக் கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

அப்போது மீனாட்சி சுந்தரத்தின் வீட்டிலிருந்து வேலையாள் வந்து கூப்பிட்டான். 'பெரியம்மா உங்களைக் கூட்டிக் கொண்டு வரச் சொன்னாங்க. பெரியம்மா என்றுதான் திருமதி மீனாட்சி சுந்தரத்தை வேலைக்காரர்கள் அனைவரும் மரியாதையாக அழைப்பார்கள்.

கடைசிப் பெண்ணின் திருமண ஏற்பாடு பற்றி ஏதாவது நம்மைக் கலந்து பேசவேண்டியிருக்கும் அல்லது சிறிய பையனின் படிப்பைப்பற்றி இருக்கும், இரண்டும் இல்லாவிட்டால், சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி எனக்கு அறிவுரை கூறுவதற்காக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு புறப்பட்டுப் போனான்.அரவிந்தன். ஆனால் முற்றிலும் வேறான நிகழ்ச்சி அங்கே அவனை எதிர் கொண்டது. -

திருநெல்வேலியிலிருந்தும், திருச்சியிலிருந்தும் மீனாட்சி சுந்தரத்தின் இரண்டு மாப்பிள்ளைகளும் வந்திருந்தார்கள். மீனாட்சி சுந்தரத்தின் இறுதிச் சடங்குகளுக்கு வந்து விட்டுச் சென்ற பின்பு இப்போதுதான் அவர்களை மீண்டும் பார்க்கிறான் அரவிந்தன்.

'வாருங்கள் ஏது இரண்டு மாப்பிள்ளைகளும் கட்சி சேர்ந்து கொண்டு வந்திருக்கிறாற் போலிருக்கிறதே? என்று கலகலப்பாக வரவேற்ற அரவிந்தன், பதிலுக்கு, அவர்களிடம் கலகலப்பைக் காணாமல் மருண்டான் உட்புறம் கதவருகில் திருமதி மீனாட்சிசுந்தரம் தென்பட்டாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/423&oldid=556146" இலிருந்து மீள்விக்கப்பட்டது