பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 குறிஞ்சிமலர்

முருகானந்தமும் வற்புறுத்தித் தானப்ப முதலித் தெரு வீட்டுக்கே அவனை அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள்.

"ஆனாலும் நீ கெட்டிக்காரன்தானப்பா? இவ்வளவு பெரிய காரியம் நடந்தும் அன்று அவர்களோடு சென்னை புறப்படும் போதுகூட என்னிடமோ அவர்களிடமோ ஒரு வார்த்தை சொல்லவில்லையே நீ" என்று வீட்டுக்கு அழைத்துச் சென்றபின் மறுபடியும் அரவிந்தனைக் கடிந்து கொண்டான் முருகானந்தம். 'தம்பி கவலைப்படாதே வேறு ஒர் அச்சகத்தில் உனக்கு வேலை தேடித் தருவது என் பொறுப்பு. ஒரு வேலையுமே கிடைக்க வில்லையானால் என்னுடைய தையல் கடைக்கு வந்துவிடு! தொழில்களில் எதுவுமே குறைவுடையதில்லை. தொழிலையும் சொல்லிக் கொடுத்து மீனாட்சி அச்சகத்தில் கொடுத்ததை விடப் பத்து ரூபாய் கூடவே சம்பளம் தருகிறேன் நான்' என்று பூரணியின் தம்பி திருநாவுக்கரசை முதுகில் தட்டிக் கொடுத்து முருகானந்தம் உற்சாகப்படுத்தினான். தனக்கு வேண்டியவர்கள் சோர்வடைந்து கிடப்பதை ஒரு கணமும் பொறுக்காதவன் அவன். மங்களேசுவரி அம்மாள் வீட்டு மாடியில் வசதியான அறை ஒன்றில் அரவிந்தனைத் தங்கச் செய்திருந்தாள் வசந்தா. குளியலறையும் இணைந்த வசதியான இடம் அது. 'கூச்சமோ, தயக்கமோ இல்லாமல் இங்கே பழகலாம்! இது உங்களுக்குப் புது இடமில்லை அண்ணா! உங்கள் வீடு மாதிரி நினைத்துக் கொள்ள வேண்டும். இங்கேயே மாடியில் அலமாரி நிறையப் புத்தகங்கள் இருக்கின்றன” என்றாள் வசந்தா. மரியாதையோடும் அன்புடனும் அரவிந்தனுக்கு ஒடியாடி உபசாரங்கள் செய்தாள் அவள்.

'எனக்காக நீங்கள் எல்லாரும் அதிகமான சிரமம் எடுத்துக் கொள்கிறீர்கள். இதற்கு நான் எப்படி நன்றி செலுத்தப் போகிறேனோ? நிம்மதியாக எங்கள் கிராமத்துப் பக்கம் போய்ப் பத்துப்பன்னிரண்டு நாட்கள் சுற்றிவிட்டு வரலாமென நினைக் கிறேன்' என்று முருகானந்தத்தையும் வசந்தாவையும் நோக்கி அரவிந்தன் கூறினான். -

“அதெல்லாம் எங்கும் போகக்கூடாது. உங்களுக்கு இப்போது ஒய்வு தேவை. பல வகையிலும் மன வேதனைப்பட்டுப் போயிருக்கிறீர்கள். அக்கா கல்கத்தாவிலிருந்து திரும்புகிறவரை எங்கும் நகரக்கூடாது' என்று இருவருமே அவனைத் தடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/430&oldid=556153" இலிருந்து மீள்விக்கப்பட்டது