பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 431

பதிலைக் கேட்டுப் பர்மாக்காரரின் புலி முகம் எவ்வளவு கொடிய மாற்றம் அடைந்திருக்கும் என்று கற்பனை செய்து கொண்டே மாடிப் படியேறித் தன் அறைக்குச் சென்றான் அரவிந்தன். நான் பூரணிக்காகத் தேர்தல் விளம்பரங்கள் செய்வதை நிறுத்தியாயிற்று. ஆடம்பரமான கூட்டங்களையும், ஆதரவு திரட்டும் ஏற்பாடு களையும் நிறுத்தி விட்டேன். பர்மாக்காரர் விளம்பரங்களுக்கும், ஆதரவு திரட்டும் ஏற்பாடுகளுக்கும் ஆயிரமாயிரமாகச் செலவழிக் கிறார். அப்படியிருந்தும் அவர் ஏன் என்னைக் கெஞ்சுகிறார்? ஏன் என்னைக் கண்டு பயப்படுகிறார்? பயமுறுத்துகிறார்? உண்மை யின் ஒளியைக் கண்டு பொய்க்கு ஏற்படும் பயமா இது? - என்று எண்ணி வியந்தான் அவன். பூரணிக்காக முருகானந்தம் தொகுதியின் எல்லா இடங்களிலும் நம்பிக்கை வாய்ந்த மனிதர் கள் மூலம் ஆதரவு திரட்டிக் கொண்டிருப்பது அரவிந்தனுக்குத் தெரியாது. இரண்டு மூன்று நாட்கள் வெளியே செல்வதற்குக் கூசிக்கொண்டு மங்களேசுவரி அம்மாள் வீட்டு மாடியிலேயே படிப்பதிலும் எழுதுவதிலும் நேரத்தைக் கழித்தான் அரவிந்தன். பூரணியின் இலங்கைச் சொற்பொழிவுகளை டேப்ரிக்கார்டரி லிருந்து மீண்டும் மீண்டும் வைக்கச் சொல்லி கேட்டான். அந்தக் குரல் அவன் உள்ளத்தைக் குழப்பங்களிலிருந்து விடுவித்து சாந்தியளித்தது. பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் நூல்களை உள்ளம் தோய்ந்துத் திரும்பத் திரும்பப் படித்தான். சோர்வு தோன்றிய போதெல்லாம் பூரணியின் முகத்தையும் சிரிப்பையும் நினைத்துக்கொண்டான். ஆழ்ந்த கருத்துக்கள் ஒலிக்கும் அமுதக் குரலைக் கேட்டு மகிழ்ந்தான். இலங்கையில் சைவ மங்கையர் கழகத்தில் பூரணி பேசியிருந்த ஒரு பேச்சு மிக அற்புதமா யிருந்தது. டேப்ரிக்கார்டரில் அந்தப் பேச்சை வைத்துக் கேட்கும் போதெல்லாம் அரவிந்தனுக்குக் கண்களில் ஈரம் கசிந்தது. உணர்ச்சிமயமான உயிரோட்டமுள்ள சிறந்த சொற்பொழிவு அது. 'திருவாரூர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனாரைக் கண்டு பரவை நாச்சியார் காதல் கொண்ட பகுதியைப் பற்றிய பெரியபுராணப் பேச்சு, அந்தப் பேச்சின் போது பரவை நாச்சியாருக்குச் சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் ஏற்பட்ட தெய்வீகக் காதலை விளக்கிப் பேசுகிறாள் பூரணி, தெய்வீகக் காதலுக்கு விளக்கமாகக் கரையா எனது மனக் கல்லும் கரைந்தது' என்று இராமலிங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/433&oldid=556156" இலிருந்து மீள்விக்கப்பட்டது