பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 435

எனக்கு அப்பப்பா என்ன மணம் என்ன மணம் அந்த மாலையை அப்படியே தூக்கிக் கொண்டு ஓடிவந்து உங்கள் மேசையில் வைத்து நுகர்ந்து பார்க்கச்சொல்லி மகிழ வேண்டும் போல் ஆசையிருந்தது எனக்கு. இரண்டு முழுப்பூக்களை மாலையிலிருந்து எடுத்து இந்தக் கடிதத்தில் வைத்து முழு மாலையையும் வைக்கமுடியாத குறையை நிவர்த்திசெய்து கொண்டிருக்கிறேன். பேலூர் இராமகிருஷ்ணா மடத்தின் வடபுறம் ஹல்க்ளியாற்றின் கரையில் பசும்புல் தரையில் அமர்ந்து கொண்டு. இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். என் அருகில் மங்களேசுவரி அம்மாள் உட்கார்ந்து தம் மக்களுக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்; பார்வைக்கு எட்டின தொலைவு வரை ஹல்க்ளியின் அக்கரையில் தட்சினேசுவரத்துக் காளி கோவிலும் அப்பால் எல்லையற்ற கல்கத்தா நகரமும் மங்கிய ஒவியம் போல் தெரிகின்றன. கல்கத்தாவைப் போல் இத்தனை பெரிய நகரத்தை இதற்கு முன்னால் நான் பார்த்ததே இல்லை. எவ்வளவு அழகான நகரம்..... -

தனியாக அரவிந்தன் மாடியறையில் உட்கார்ந்து கடிதத்தின் இந்த இடத்தைப் படித்துக் கொண்டிருந்த போது கீழேயிருந்து வசந்தாவின் குரல் அவனை அழைத்தது.

'அண்ணா! உங்களை யாரோ டெலிபோனில் கூப்பிடு

.கிறார்கள்."

அரவிந்தன் கடிதத்தை மடித்துப் பையில் போட்டுக் கொண்டு கீழே இறங்கி வந்தான். தனியாய் மேசையில் எடுத்து வைத்திருந்த டெலிபோனைக் கையில் எடுத்தான்.

'கடைசித் தடவையாகக் கேட்கிறேன், வாபஸ் வாங்க நாளைக்கு ஒரே நாள் தான் மீதமிருக்கிறது. மரியாதையாக வாபஸ் வாங்கச் செய்! என்னை மிகவும் பொல்லாதவன் ஆக்காதே. நான் கெட்ட கோபக்காரன்' என்று பர்மாக்காரனின் குரல் சீறியது. பதில் சொல்லாமல் ஒசையெழும்படி "ணங் கென்று டெலிபோனை வைத்தான் அரவிந்தன். அவன் முகம் சிவந்தது. பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த வசந்தா, 'என்ன அண்ணா! யார் அது? ஏதாவது நியூஸன்ஸ்ா?' என்று வினவினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/437&oldid=556160" இலிருந்து மீள்விக்கப்பட்டது