பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 குறிஞ்சிமலர்

அப்பாவின் பெருமை அந்த வீட்டை ஆண்டு கொண்டிருப் பதை பூரணி உணர்ந்தாள். காசையும் பணத்தையும் சேர்த்து வைத்து விட்டுப் போகாவிட்டாலும் அந்தக் குடும்பத்திற்கு உதவி செய்து பெருமைப்பட விரும்பும் மனிதர்களையும் உறவையும் நான்கு புறத்தும் தேடி வைத்துப் போயிருக்கிறார் அவர். பணம் வாங்க மறுக்கும் வைத்தியர், தன் குடும்பம் போல் எண்ணிச் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் ஒதுவார், தனி அநுதாபத்தோடும் அன்போடும் உதவக் காத்திருக்கும் அண்டை அயலார்கள் - இவை யெல்லாம் அப்பாவின் நினைவாக எஞ்சியிருக்கிற பெருமை களல்லவா? -

பள்ளிக் கூடத்துப் பையன்கள் கூட்டம் போகிற வழியா யில்லை. 'உங்களுக்கெல்லாம் வேடிக்கையாயிருக்கிறதா? அவன் கையை ஒடித்துக் கொண்டு வந்து விழுந்துகிடக்கிறான். கூட்டம் போடாமல் வீட்டுக்குப் போய் சேருங்கள்' என்று ஒதுவார்க் கிழவர் கூப்பாடு போட்ட பின்பே பிள்ளைகள் கூட்டம் குறைந்தது. குழந்தை மங்கையர்க்கரசிக்கு நடந்தது என்னவென்று தெரியாவிட்டாலும், 'அண்ணன் சம்பந்தனுக்கு ஏதோ பெரிய துன்பம் வந்திருக்கிறது. இல்லாவிடில் பாயில் படுக்க விட்டு வைத்தியரெல்லாம் கட்டுப் போட மாட்டார், இத்தனை பேர் கூடமாட்டார்கள்' என்று மொத்தமாக ஏதோ துக்கம் புரிந்தது. அதனால் அந்தக் குழந்தையின் அழுகை இன்னும் ஒயவில்லை. எதிர் வீட்டு ஒதுவார்க் கிழவர் விடைபெற்றுப் புறப்பட்டார். நான் வீட்டுக்குப் போகிறேன் பூரணி தம்பியைக் கவனமாகப் பார்த்துக்கொள்; ஏதாவது வேண்டுமானால் என்னைக் கூப்பிடு; வாசல் திண்ணையில் தான் படுத்துக் கொண்டிருப்பேன். எதை நினைத்தும் துக்கப்படாதே அம்மா! 'இன்னாருடைய பெண்' எனச் சொன்னாலே மற்றவர்கள் போட்டி போட்டிக் கொண்டு உதவ முன் வருகிற அத்தனைப் பெருமையை அப்பா தனக்குத் தேடி வைத்துப் போயிருக்கிறார். நீ ஏன் அம்மா கலங்க வேண்டும்?' என்று போகும் போது சொல்லிவிட்டுத்தான் போனார் அவர்.

'எல்லோரும் இப்படித்தான் சொல்லுகிறார்கள் அப்பாவின் பெருமை இன்ஷ்யூரன்ஸ் ஏற்பாடுபோல் மரணத்துக்குப்பின் இலாபம் சம்பாதிக்கிற உயில் வியாபாரமா என்ன? பண்புள்ளவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/44&oldid=555768" இலிருந்து மீள்விக்கப்பட்டது