பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 குறிஞ்சிமலர்

விளக்க என்னாலேயே முடியாத இந்த உணர்வு அண்மையில் சிறிது காலமாக அடிக்கடி உண்டாகிறது எனக்கு.

நாங்கள் இங்கு வந்து சேர்ந்ததும், முதல் நாள் மகாநாட்டில் எனக்கு விந்தையான அனுபவம் ஒன்று ஏற்பட்டது. நான் மேடையில் பேசிவிட்டுக் கீழே இறங்கி என் இடத்தில் வந்து அமர்ந்ததும்; மகாநாட்டுக்கென்று விசேடப் பிரதிநிதியாகச் சீனாவிலிருந்து வந்திருந்த சீனப் பெண்மணி ஒருத்தி என்முன் வந்து நின்றுகொண்டு, கண்களை இமையாமல் இப்படியே சிறிது நேரம் உங்கள் முகத்தைக் காண்பிக்க வேண்டும்' என்று ஆங்கிலத்தில் வேண்டிக் கொண்டாள். நான் அந்த வேண்டு கோளின் பொருள் புரியாமல் மருண்டேன்.

'ஏன், எதற்காக?' என்று அருகில் இருந்த மங்களேசுவரி அம்மாள் அந்தப் பெண்மணியைக் கேட்டார்கள். இந்த முகத்தையும் இதன் அகன்ற நெடுங் கண்களையும் காணும்போது அளவற்றதொரு தெய்வீக மகிழ்ச்சி என் உள்ளத்தில் ஏற்படுகிறது. இந்த முகத்தையும் விழிகளையும் காணும்போது விண்டுரைக்க மாட்டாததொரு தெய்வீகப் புனித உணர்வு பெறுகிறேன். இந்தப் பெண் பேசியபோது இவள் முகத்தையே தான் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆயினும் என்னுடைய பார்க்கும் தாகம் இன்னும் அடங்கவில்லை' என்று உருக்கமான குரலில் பதில் கூறினாள் அவள். எனக்கு ஒரே வெட்கமாகப் போயிற்று. அந்தச் சீனப் பெண்மணி என்னை அப்படியே உட்காரச் சொல்லிப் படம் பிடித்துக் கொண்டான். 'தென்னிந்தியாவின் தெய்வீக அழகு (தி டிவைன் பியூட்டி ஆப் சவுத் இண்டியா) என்ற பொருள்படும் ஆங்கிலச்சொற்றொடரைச் சொல்லி அப்பெயருடன் தங்கள் நாட்டுப் பத்திரிகைகளில் என் படத்தை வெளியிடப் போவதாகக் கூறினாள். இங்கு நடைபெற்ற கிழக்கு ஆசியப் பெண்கள் மகாநாட்டில் முக்கால் மணிநேரம் ஆங்கிலத்தில் பேசினேன். என்னுடைய பேச்சு சிறப்பாகவும் புதுமையாகவும் இருந்ததென்று நம் மங்களேசுவரி அம்மாள் உள்பட எல்லோரும் சொல்கிறார்கள்.

ஆண்கள் நிகழ்காலத்துக்காக மட்டும் வாழ்கிறார்கள். - பெண்களாகிய நாம் அப்படி அல்ல. நம்முடைய ஒரு தலை முறையைச் சேர்ந்த வாழ்வு பல தலை முறைக்கு மணமும் பண்பும் நல்கிக் கொண்டே தொடரவேண்டிய வாழ்வாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/442&oldid=556165" இலிருந்து மீள்விக்கப்பட்டது