பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 447 எங்கேயோ விஷக்காய்ச்சல் வந்திருந்தால் இவருக்கென்ன வந்தது?" என்று முருகானந்தத்திடம் கூறினாள் வசந்தா.

'நடக்காது வசந்தா இந்த மாதிரி பிறருக்கு உதவுகிற காரியங்களில் அரவிந்தன் பிடிவாதக்காரன். யார் தடுத்தாலும் கேட்கமாட்டான்' என்று முருகானந்தம் மறுத்து விட்டான். மேலும் இந்தச் சமயத்தில் அரவிந்தன் வெளியூரில் இருப்பது நல்லதென்று தோன்றியது முருகானந்தத்துக்கு. தேர்தல் பகை களும் வம்புகளும் உள்ளுரில் அரவிந்தனை வட்டமிடுகிற சமயத்தில் அவன் யாருக்கும் தெரியாமல் வெளியூர் சென்றிருப்பது ஒரு வகையில் நல்லதென்று நினைத்தான் முருகானந்தம். அரவிந்தனுடைய தடைகளுக்கு அஞ்சாமல் தான் தாராளமாகப் பூரணிக்குத் தேர்தல் ஆதரவு தேடும் வேலைகளில் இறங்கவும் வசதியாயிருக்கும் என்று எண்ணினான் அவன். அதனால் அதிக அக்கறை காட்டவில்லை.

தேர்தல் சுறுசுறுப்பிலும், வேலைகளின் வேகத்திலும் நாட்கள் கழிவதே தெரியவில்லை. முருகானந்தம் பம்பரமாய்ச் சுற்றி அலைந்து கொண்டிருந்தான். காலையில் ஆறு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினால் இரவு அவன் வீடு திரும்பப் பன்னிரண்டு மணிக்கு மேலும் ஆயிற்று. பர்மாக்காரர் போட்டி கடுமையாயிற்று. 'உண்டு இல்லை' என்று அவர் இரண்டி லொன்று பார்த்துக்கொண்டிருந்தார். -

அரவிந்தன் கிராமத்துக்குப் புறப்பட்டுப்போன மூன்றாம் நாளே பூரணியும் மங்களேசுவரி அம்மாளும் கல்கத்தாவிலிருந்து திரும்பிவிட்டார்கள். 'மங்களேசுவரி அம்மாளுக்கு உடல்நிலை நன்றாயில்லாததால் காசிப்பயணத்தை நிறுத்திவிட்டுக் கல்கத்தாவி லிருந்து நேரே திரும்பிவிட்டார்கள். இருவரும் மதுரை திரும்பிய தும், அரவிந்தன் மீனாட்சி அச்சகத்திலிருந்து பிரிந்த செய்தி அவர்கள் இருவருக்கும் தெரிந்தது. பூரணிக்குத் தாங்கிக் கொள்ள முடியாத பேரிடிபோல் இருந்தது அந்தச் செய்தி. தான் கல்கத்தா புறப்படும் முன்பே அது நிகழ்ந்திருந்தும் அதைப்பற்றித் தன்னிடம் கூறாமல் மறைத்த அவன் நெஞ்சுரம் அவளை மலைப்படையச் செய்தது. தங்களை வழியனுப்புவதற்காகச் சென்னை வரும்போது இரயிலில் அரவிந்தன் களையில்லாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/449&oldid=556172" இலிருந்து மீள்விக்கப்பட்டது