பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/453

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 45]

பேரவல உணர்வு, புறத்திலும் அழத் தூண்டியது. மதுரை திரும்பியதும் ஒவ்வொன்றாய் உற்சாகக் குறைவான அனுபவங்கள் அவளுக்கு ஏற்பட்டதுதான் அதற்குக் காரணமா?

கல்கத்தாவிலிருந்து ஊர் திரும்பியதும் அரவிந்தன் அச்சகத்திலிருந்து சூழ்ச்சியால் நீக்கப்பட்ட விவரம் அவளுக்குத் தெரிந்தது. தனக்குத் தேர்தலில் ஆடம்பரமாக ஆதரவு தேடாமல் இருக்கும்போதே எதிர்ப்பாளர்கள் கொடுமையான முறையில் நடந்து கொள்கிறார்கள் என்பதும் அவளுக்குப் புரிந்தது. அரவிந்தன் மிகப் பொல்லாததும் பயங்கரமாகத் தொற்றக் கூடியதுமான நச்சுக்காய்ச்சல் பரவியிருக்கும் கிராமத்துக்குத் தொண்டு செய்ய ஒடியிருப்பதும் திரும்பிய பின்னே அவளுக்குத் தெரிந்தது. எல்லாவற்றையும் நினைக்க நினைக்கப் பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் மனிதர்களின் சிறுமை சிறிது சிறிதாக விளங்கலாயிற்று அவளுக்கு. அவளும் அவளுடைய அரவிந்தனும் மனிதர்களின் கீழ்மையிலிருந்து விலகி உயரத்தில் ஏறிச்செல்ல இணையாக ஆசைப்படுகிறார்கள். ஆனால் உலகத்தின் கீழ்மைகள் இருவரையும் பாதிக்கின்றன. நிலத்துக்கு எட்டாதனவாய் எங்கள் நினைவுகளை ஏன் இப்படிக் குறிஞ்சியாகப் பூக்கச் செய்கிறாய் இறைவா! கமலாவையும் காமுவையும் போல் வாழும் ஆசையையாவது எனக்குத் தந்திருக்கக் கூடாதா என்று ஏங்கியது அவள் உள்ளம். அரவிந்தன் அருகில் இருக்கும் போது மறந்து விடுகிற உடம்பின் நினைவு அவன் அருகில் இல்லாதபோது 'ஏன் இந்த உள்ளத்தை இப்படிப் பிழிகிறது?" என்று தன் உள்ளமே தானறியாத முரண்பாடுகள் நிறைந்ததாயிருப்பதை எண்ணி வாடினாள் அவள். அவளுக்கே புரியாத மன வேதனைகள் அவளை நிம்மதி இழக்கச் செய்திருந்தன. மெளனமாகத் தனியே இருந்து நெடுநேரம் நன்றாக அழவேண்டும் போல் வருத்தமாயிருந்தது அவளுக்கு.

அன்று இரவு முருகானந்தம் அரவிந்தனோடு கிராமத்தி விருந்து காரில் திரும்பி வீடு வந்தபோது பதினோரு மணிக்கு மேலிருக்கும். வாயிலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டு, மாடியில் உறங்காமல் விழித்திருந்த பூரணிதான் ஓடிவந்து ஆவலோடு கதவைத் திறந்தாள். அங்கே கண்ட காட்சி அவளுடைய ஆவலை அவலமாக மாற்றிற்று. அரவிந்தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/453&oldid=556176" இலிருந்து மீள்விக்கப்பட்டது