பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 குறிஞ்சிமலர்

'உடம்பு ஒரு பெரிய புண் என்று நீயே உன்னுடைய இலங்கை வானொலிப் பேச்சில் பேசியிருக்கிறாயே! அரை உடம்பானாலும் பாதிப்புண் ஆறிவிட்டதென்று தானே பொருள்?" என்று அந்தத் தளர்ந்த நிலையிலும் குறும்பாகச் சிரித்துக் கொண்டே அவளைக் கேட்டான் அரவிந்தன். வந்ததும் வராததுமாக முருகானந்தம் டாக்டர் வீட்டுக்கு ஒடியிருந்தான். பேச்சுக்குரல் கேட்டுத் தூங்கிக்கொண்டிருந்த மங்களேசுவரி அம்மாளும், வசந்தாவும் எழுந்திருந்து மாடிக்கு விரைந்து வந்தார்கள். பூரணி, 'அம்மா! இவரைப் பார்த்தீங்களா? எப்படி ஆகிவிட்டார்?' என்று துயரம் பொங்கக் கூறினாள். அவள் குரல் நைந்து அழுவது போலிருந்தது. அரவிந்தன் படுக்கையில் கிடந்த நிலையைக் கண்டதும் மங்களேசுவரி அம்மாளும் வசந்தாவும் அதிர்ச்சியடைந்தார்கள். வசந்தா ஓடிப்போய் தர்மா மீட்டரை எடுத்து வந்தாள். காய்ச்சல் நூற்றிரண்டு டிகிரிக்குமேல் இருந்தது. முருகானந்தம் டாக்டரோடு வந்தான். டாக்டர் பார்த்து முடிந்ததும் காய்ச்சல் தணிவதற்கு 'குளோரோமைலின் மாத்திரை கொடுத்துக் கொண்டிருக்கும்படி சொல்லிவிட்டுப் போனார். போகும் போது முருகானந்தத்தைத் தனியே வாயில் வரை அழைத்துச் சென்று அவனிடம் மட்டும் 'டைபாய்டு மாதிரி தோன்றுகிறது. ஐந்தாறு நாள் சரியான கவனிப்பில்லாமல் வேறு இருந்திருக்கிறார். எதற்கும் நீங்கள் பயப்பட வேண்டாம். ஆனாலும் கொஞ்சம் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டிய நிலைதான். பத்துப் பதினொரு நாளில் விட்டாலும் விடும். நாற்பது நாள் வரை வதைத்தாலும் வதைக்கும். சனியன் பிடித்த காய்ச்சல் இது. மறுபடியும் நாளைக்கு வந்து பார்க்கிறேன். பெண்களிடம் இதையெல்லாம் இப்போது ஒன்றும் சொல்லிப் பயமுறுத்த வேண்டாம்' என்று கூறிவிட்டுப் போனார் டாக்டர். அதை அறிந்ததும் முருகானந்தத்தின் உள்ளத்தில் கவலை சூழ்ந்தது. எந்த நிலையிலும் மனோதிடத்தை இழக்காத அவனுடைய இறுகிய உள்ளமும் அப்போது அரவிந்தனுக்காக உருகி நெகிழ்ந்தது. கண்கள் கலங்கினான் அவன். நண்பனை இவ்வளவு பெரிய நலிவோடு காண்பது புது அனுபவம் அவனுக்கு. "நீங்கள் இப்படி அசட்டுத்தனம் பண்ணியிருக்கக் கூடாது அரவிந்தன்! விஷக்காய்ச்சல் பரவியிருக்கிற கிராமத்துக்குப் போனதே தப்பு. போனதுதான் போனீர்கள், மற்றவர்களுக்குத் தொண்டு செய்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/456&oldid=556179" இலிருந்து மீள்விக்கப்பட்டது