பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 குறிஞ்சிமலர் படியேறி வரும் ஒலி கேட்டது. அந்த அம்மாள் மலர்ந்த முகத்தோடு மாடியறைக்குள் வந்தாள்.

'அம்மா தேர்தல் எக்கேடும் கெட்டுப் போகட்டும். டாக்டருக்கு உடனே டெலிபோன் செய்யுங்கள். இங்கே இவருக்கு ஜன்னி கண்டுவிட்டது. பேச்சு மூச்சு இல்லை என்று வெடித்துப் பொங்கிவரும் அழுகைக்கிடையே அலறினாள் பூரணி.

37

சொல்லரிய பல துறையும்

துயர பெரிய தமிழ் நாட்டில் மெல்ல மெல்ல நலம்காண

மேலெழுந்தமிழ்ச் செல்வன் செல்லரித்த பழமையெல்லாம்

சீர்திருத்த முன் வந்தோன் புல்லரித்து மனம் வாடப்

போகின்றான் போகின்றான் மதுரைமாவட்ட அதிகாரியின் அலுவலகத்தில் தேர்தல் முடிவு தெரிவிக்கப்பட்டபோது, மாலைமங்கி, இருள்சூழும் நேரம் ஆகியிருந்தது. வானத்தில் முழு நிலவு பால் வண்ணமாய்த் தண்கதிர் பரப்பத் தொடங்கியிருந்தது. அன்று பெளர்ணமி நாள். நல்முடிவைக் கேட்ட மகிழ்ச்சியோடு வாக்குச் சீட்டுக்கள் எண்ணப்பட்ட அலுவலகத்து வாயிலுக்கு வந்து நின்ற முருகானந்தம் அங்கு கூடியிருந்தவர்கள் பூரணி தேவி வாழ்க!" என்று விண்ணதிர வாழ்த்தொலி முழங்கியதைக் கேட்டுக் களித்தான். கூடியிருந்த முகங்களிலெல்லாம் நியாயம் வென்ற தென்ற பெருமிதப்புன்னகை நிலவியது. கைகளிலெல்லாம் வெற்றி பெற்ற பூரணிக்கு அணிவிக்கக் கொணர்ந்த மாலைகள் மலர்ந்தன. பூரணி அங்கு வரவில்லை என்றதும் அவள் வெற்றியை எதிர்பார்த்துப் பாராட்ட வந்தவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. 'வசந்தா! நீ காரில் புறப்படு. முன்னால் போய் நல்ல செய்தியை அக்காவுக்கும் அரவிந்தனுக்கும் அம்மாவுக்கும் சொல். இவர்கள் எல்லோரும் வெற்றி பெற்றதைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/462&oldid=556185" இலிருந்து மீள்விக்கப்பட்டது