பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவு நிறைகிறது

காலமெனும் பூச்செடியில் கனவு மலர் பூத்தாச்சு சாலமிகும் விதிக்கொடுமை சார்ந்துவர உதிர்ந்தாச்சு! இந்த முடிவுரையைப் படிக்கத் தொடங்குமுன்பே வாசகர்கள் என்மேல் சீற்றமடைந்திருப்பார்கள் என்று என்னால் உய்த்துணர முடிகிறது. அரவிந்தன் என்ற இலட்சிய இளைஞன் இறந்திருக் கக் கூடாது' என்று கடுமையாக வாதமிடுவார்கள், கண்டிப்பார்கள், கடிந்து கொள்வார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் இந்தக் கதையின் ஆசிரியன் ஒரே பதிலைத்தான் கூறமுடியும். அரவிந்தன் சாகவில்லை! இந்தத் தலைமுறையிலோ நாளைக்கு வரப்போகும். தலை முறையிலோ, இந்தத் தமிழ் மண்ணில் அன்பும் அருளும் பண்பும் அழகும் நிறைந்து தோன்றும் இளைஞனை இளைஞர்களை எங்கே கண்டாலும் அங்கே அரவிந்தன் பிறந்திருப்பதாக நினைத்து வணங்குங்கள் வாழ்த்துங்கள்!

நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் கொண்டு ஞானப் பூங்கோதையாய் நின்று நோயும், வறுமையும் நிறைந்த மனிதர்களிடையே அருளொளி பரப்பி உயரிய வாழ்வு காண ஆசைப்படும் பெண் திலகத்தை - திலகவதிகளை எங்கே கண்டாலும் அங்கே பூரணி பிறந்திருப்பதாக நினைத்து வணங்குங்கள் வாழ்த்துங்கள் பூரணியும், அரவிந்தனும் வெறும் கதா பாத்திரங்களல்லர். அவர்கள் தமிழினத்து ஆண்மை, பெண்மைக்கு விளக்கமாகும் அழகிய தத்துவங்கள். மனிதர் களுக்குத் தான் அழிவு உண்டு. தத்துவங்களுக்கு அழிவில்லை. அவை உடலுணர்வுகளுக்கு அப்பாற்பட்டவை; உயர்ந்தவை. இந்தக் கதையில் பூரணி இறக்கவில்லை. அவள் என்றும் அழியாதவள். -

ஞான ஒளி பரப்பித் தமிழும் தொண்டுமாக நூறு வயதுக்கு மேலும் ஒளவையார் போல் தாய்த் தெய்வமாக வாழ்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/473&oldid=556196" இலிருந்து மீள்விக்கப்பட்டது