பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 குறிஞ்சிமலர் இத்தகைய சிலிர்ப்பை அவள் பலமுறை உணர்ந்திருக்கிறாள். பவள மல்லிகைப் பூ மலர்கிற போது தோட்டம் முழுவதும் ஒரு தெய்வீக நறுமணம் பரவி நிறைவதுண்டு. அபூர்வமான சில மனிதர்களுக்கு மனமும் எண்ணங்களும், வளர்ந்து விகசிக்கிற பருவத்தில் அந்த எண்ணங்களின் மலர்ச்சியால் எண்ணுகிறவர் களைச் சுற்றி ஒருவகை ஞான மணமோ எனத்தக்க புனிதமான சூழ்நிலை நிலவும்.

கண்ணிமைகள் சோர்ந்து விழிகளில் சாய்ந்தன. புத்தகம் இரண்டொரு முறை கை நழுவியது. பூரணி விளக்கை அணைத்து விட்டுப் படுக்கையில் போய்ப் படுத்துக் கொண்டாள். உடலே கனம் குறைந்து இலவம் பஞ்சாகிப் போய்விட்ட மாதிரிச் சுகமான உறக்கம் அவளைத் தழுவியது.

காலையில் நாட்டு வைத்தியர் வந்து சம்பந்தனின் கையைப் பார்த்து விட்டுப் போனார். அன்று சனிக்கிழமை. திருநாவுக் கரசுக்குப் பள்ளிக்கூடம் விடுமுறை. பால்காரனுக்கு மாதம் முடிகிற வரை கணக்கு இருப்பதால் பால் ஊற்றி விட்டுப் போயிருந்தான். காப்பியைப் போட்டுக் கொடுத்து விட்டு முதல் நாளிரவு வாங்கிக் கொண்டு வந்திருந்த கமலாவின் அறுந்த சங்கிலியைச் செம்மைப் படுத்திக் கொண்டு வருவதற்குப் புறப்பட்டாள் பூரணி. -

பத்தர் மிகவும் வேண்டியவர் தான். ஆனால் ஏழைகளாயிருப் பவர்கள் ஒருவருக்கொருவர் வேண்டியவராயிருப்பதால் என்ன பயன்? உதவவும் முடியாது; உதவும் படி வேண்டவும் முடியாது. சங்கிலி பழைய சங்கிலியாவதற்கு இரண்டு மணி நேரம் பிடித்தது. வேலையை முடித்துச் சங்கிலியைக் காகிதத்தில் வைத்துக் கொடுத்த பத்தரை நோக்கி, 'இதற்கு நான் என்ன தர வேண்டும்?' என்று கேட்டாள் பூரணி.

'ஐந்து ரூபாய் கொடு. குழந்தை' பத்தருக்கு எத்தனை வயதுப் பெண்ணாயிருந்தாலும் எல்லாரும் குழந்தைதான். கொஞ்சம் வம்பு பேசி வழக்காடியிருந்தால் பத்தர் இரண்டொரு ரூபாய்கள் குறைத்திருப்பாரோ என்னவோ? பண்பட்ட குடிப் பிறப்பைத் தாங்கிய நாக்குப் பேரம் பேச எழவில்லை. ஐந்து ரூபாயை மறு பேச்சின்றிக் கொடுத்து விட்டாள். சங்கிலியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/58&oldid=555782" இலிருந்து மீள்விக்கப்பட்டது