பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 59 கமலாவிடம் சங்கிலியைக் கொடுத்து விட்டுப் பூரணி விடு திரும்பினாள். தேரடியில் ஒதுவார்க் கிழவர் எதிர்ப்பட்டார்.

'மூஞ்சி முகரையெல்லாம் கறுத்துப் போகிறாற் போல் இப்படி வெய்யிலில் அலைவாளா ஒரு பெண்? அப்படி என்ன அம்மா தலைபோகிற காரியம்?"

'ஒன்றுமில்லை தாத்தா இங்கே பக்கத்துத் தெருவில் கமலா என்று ஒரு பழைய சிநேகிதி இருக்கிறாள். அவளைப் பார்த்து விட்டு வருகிறேன்' என்று கிழவரின் அனுதாப விசாரிப்புக்குப் பதில் சொல்லி விட்டு மேலே நடந்தாள் பூரணி. தெரு நடு விலிருந்த கல்மண்டபத்தருகே தயிர்க்காரி எதிரே வந்து பிடித்துக் கொண்டாள்.

நான் காசு பணம் சேர்த்து வைத்துக் கொண்டு பிழைக் கிறவள் இல்லை, அம்மா! அப்பப்போ நீங்க கொடுக்கிறதை வாங்கிதான் த விடு, பிண்ணாக்கு என்று வாங்கணும். பூராப் பாக்கியும் தர முடியாவிட்டாலும் ஏதாவது ஒண்ணு ரெண்டு கொடுங்கம்மா...'

கையில் மீதமிருந்த இரண்டு ரூபாய் இரண்டரை அனாவில் ஒன்றரை ரூபாயை அவளிடம் கொடுத்து அவளுக்கு நல்லவ லானாள் பூரணி. அந்த பதினொன்றே முக்கால் மணி வெய்யிலில் திருப்பரங்குன்றம் சந்நிதித் தெருவில் சுறுசுறுப்பும் இல்லை; கலகலப்பும் இல்லை. வெற்றிலை பாக்குக் கடைக்காரர்கள் கூடப் பொழுது போகாமல் ஈயோட்டிக் கொண்டிருந்தார்கள். தெருவும், கோபுரமும், மலையும் பரம சுகத்தோடு வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்தன. மேற்கே இரயில்வே லயனில் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ஒடிச் சென்று நின்றது. அந்த வழியாகச் செல்லுகிற மூன்று எக்ஸ்பிரஸ்களில் அதற்கு மட்டும் தான் முருகன் மேல் பற்று. மூன்று விநாடிகள் நின்று கரும் புகையை மலை நோக்கி அள்ளி வீசி விட்டுப் பின் போய் விடும். வேறு எக்ஸ்பிரஸ்களுக்கு அந்தப் பற்றும் இல்லை. .

வீட்டில் காலையில் குடித்த ஒரு வாய் காப்பியோடு தம்பி, தங்கைகள் பட்டினி கிடப்பார்களென்ற நினைவு பூரணிக்கு வந்தது. ஒட்டலில் நுழைந்து எட்டனாவிற்குச் சிற்றுண்டி வாங்கிக் கொண்டு சென்றாள். குழந்தை மங்கையர்க்கரசி, 'அக்கா ரொம்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/61&oldid=555785" இலிருந்து மீள்விக்கப்பட்டது