பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 குறிஞ்சிமலர் போல் தமிழ்ப்பண்பில் வந்த தாய்மை கனியும் அந்த முகம், பெண்ணே நீ வாழு வாழச் செய்' - என்று சொல்வது போல் உறுதியை உமிழ்ந்தது.

குளித்து முடிந்ததும் பூரணி வெளியே புறப்படுவதற்குத் தயாரானாள். அழுகையின் காரணமாகக் கெண்டை மீனுக்குச் செந்நிறம் தீட்டினாற் போல் அவள் எழில் நயனங்கள் சிவந்திருந்தன. விரிந்து மலரும் போது செவியைத் தொடுவது போல் அகலும் அழகு அந்தக் கண்களுக்கு உண்டு.

சாயங்காலம் வைத்தியர் வந்தால் தம்பியைப் பார்க்கச் சொல்லு. குழந்தை வெய்யிலில் தெருவில் அலையாமல் பார்த்துக் கொள். நான் வருவதற்கு அதிக நேரமாகும் ' என்று திரு நாவுக்கரசிடம் சொல்லி விட்டுக் குடையை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் பூரணி. நகரத்தில் எங்காவது ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டு தான் வீடு திரும்புவது என்று அப்போது அவள் உள்ளத்தில் ஒரு வைராக்கியம் பற்றியிருந்தது. வயிற்றில் பசி, மனதில் வைராக்கியம், கண்களில் ஒளி, கையில் சிறியதாய் நளினமாய்ப் பெண்கள் பிடித்துக் கொள்கிற மாதிரிக் குடை, மண்ணையும் வெப்பத்தையும் அதிகமாக உணர்ந்தறியாத அந்த அனிச்சப் பூக் கால்கள் நொந்தன. நோவை அவள் பொருட் படுத்தவில்லை.

கையிலிருந்த காசுக்கு எவ்வளவு தூரம் பஸ்ஸில் போக முடியுமோ, அவ்வளவு தூரம் போய் இறங்கிக் கொண்டு நடந்தாள். மனத்தில் தெம்பும், நடையில் வேகமும் கொண் டிருந்தாள் பூரணி. அவளுக்கு இப்போது வாழும் வெறி வந்திருந்தது.

நியாயமான வாழ்வைத்தேடி ஓர் இளம்பெண் இந்தப் பெரிய நகரத்தின் தெருக்களில் இப்படி அலைவதில் வெட்கமும் வேதனையும் படவேண்டியதில்லை. இதே மதுரையின் தெருக் களில்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஒற்றைச் சிலம்பும் கையுமாக ஒரு சோழ நாட்டுப்பெண் நியாயம் தேடினாள். பூரணி நியாமான வாழ்வைத் தேடுகிறாள்.

அவளுடைய கண்கள் அந்த நான்கு கோபுரங்களையும் சுற்றி வாழ்வைத் தேடின. உதவி செய்து உழைப்பை வாங்கிக்கொள்ளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/64&oldid=555788" இலிருந்து மீள்விக்கப்பட்டது