பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 குறிஞ்சி மலர் 'பேசக் கற்றுவிட்டதனால் என்ன இருக்கிறது? அறிவுக்குக் கற்றவற்றைக் கொண்டு வாழ்வுக்கு முயல முடிவதில்ல்ை. வாழ்க்கைப் படிப்பே தனியாக இருக்கிறது. அங்கே 'ஃபெயிலானவர்களை மேல் வகுப்புக்கு அனுப்புகிறார்கள். பாஸாகிறவர்களைக் கீழ் வகுப்புக்கு அனுப்புகிறார்கள். எல்லாம் தலைகீழாகத்தான் இருக்கிறது. அதை விபத்து' என்று கூறாமல் வேறு எப்படிக் கூறுவது?” -

அந்த அம்மாள் முகம் வியப்பால் மலர்ந்தது. பித்தளை என்று தேய்த்துப் பார்த்து அலட்சியமாக எறிய இருந்த பொருளைத் தங்கம் என்று கண்டுகொண்டாற் போன்ற மலர்ச்சி அது. 'ஏதோ நடுத்தெருவில் மூர்ச்சையாகி விழுந்த பெண், சிறிது நேரத்துக்கு வைத்துக் கொண்டிருந்து விட்டு வீட்டுக்கு அனுப்பி விடலாம்: என்ற சாதாரண எண்ணம் மாறிப் பூரணியின் மேல் அந்த அம்மாளுக்கு அக்கறை விழுந்தது. மனோரஞ்சிதப் பூ எங்கிருந் தாலும், எப்போதிருந்தாலும், அதனால் மணக்காமல் இருக்க முடியாது. பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் தம் பெண்ணை அறிவுப் பிழம்பாய் உருவாக்கி விட்டுப் போயிருந்தார். அவள் எங்கே பேசினாலும், யாரிடம் பேசினாலும், எப்போது பேசினாலும் மனோரஞ்சித மனம் போல் சொற்களில் கருத்து மணக் கிறது. அந்த மணத்தை நீக்கிப் பேச அவளாலேயே முடியாது.

'நிறையப் படித்திருக்கிறாய் போலிருக்கிறதே. உன்னைப் பற்றி எனக்குக் கொஞ்சம் சொல், அம்மா பட்டுக் கத்திரிப்பது போல் அழகாகவும் அளவாகவும் பேசுகிறாயே நீ?"

தன்னைப் பற்றி அந்த அம்மாளிடம் சொல்லி அறிமுகப் படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்தானா என்ற தயக்கத் துடன் அந்தத் தாய்மை கனிந்த முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் பூரணி. காலையில் குளிக்கும் பொழுது மனங்குமுறியழுத சமயத்தில் நினைவு வந்ததே தாயின் முகம்; அது மறுபடியும் அவளுக்கு நினைவு வந்தது.

அதிக முதுமை என்றும் சொல்வதற்கில்லை, அதிக இளமை என்றும் சொல்வதிற்கில்லை. நடுத்தர வயதுக்குச் சிறிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/68&oldid=555792" இலிருந்து மீள்விக்கப்பட்டது