பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 71.

சாப்பாட்டு அறையில் மேஜையில் எதிரெதிரே இலைகள் போடப்பட்டிருந்தன. சமையற்காரப் பெண் பரிமாறினாள். கை வழுக்கினாற் போல் கண்ணாடி தகடு பரப்பிய நீண்ட மேஜை அது. பூரணி தடுமாறினாள். அப்படி அமர்ந்து உண்பது அவளுக்குப் புதிய பழக்கம். "உனக்கு மேஜையில் சாப்பிட்டுப் பழக்கமில்லை பூரணி?"

& 'இல்லை. 3 *

'பார்த்தாயா; இதற்குத்தான் மாறுபட்ட சூழ்நிலைகளிலும் பழக வேண்டுமென்பது' என்று சொல்லிச் சிறிது கேலியாக நகைத்தாள் மங்களேஸ்வரி அம்மாள்.

'மன்னிக்க வேண்டும் அம்மா! உங்களை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. திருநீறு அணிந்த நெற்றியும், தூய்மை விளங்கும் தோற்றமுமாகப் பழமையில் வந்து பண்பைக் காட்டுகிறீர்கள். பேச்சிலோ புதுமை காட்டுகிறீர்கள். சில வற்றுக்குப் பழமையைப் போற்றுகிறீர்கள். சிலவற்றுக்குப் புதுமையைப் பேணுகிறீர்கள். நேற்று வந்த பழக்கத்துக்கு ஆயிரங்காலத்துப் பழக்கத்தை விட்டுக் கொடுப்பது தான் மாறு பட்ட சூழ்நிலையா? தரையில் உட்கார்ந்து இலையில் சாப்பிடு வது எனக்குப் பழக்கம், என் தந்தைக்குப் பழக்கம். அவருடைய தந்தைக்குப் பழக்கம். பாட்டன், கொள்ளுப் பாட்டன் காலத்தியப் பழக்கத்தை நாகரிகத்தின் பேரால் நான் ஏன் விட வேண்டும்? அன்புக்காகப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளலாம். கேலிக்குப் பயந்து பழக்கத்தை மாற்றக் கூடாது. எனக்கு மேஜையில் சாப்பிடத் தெரியாது. உங்களுக்கு கேலியாகப் படுமானால் நான் தரையில் இலையை எடுத்துப் போட்டுக் கொண்டு கீழே உட்கார்ந்து விடுவேன். நீங்கள் கீழே வந்தால் நான் உங்களைக் கேலி செய்ய நேரிடும்.' -

'ஏ அப்பா பெரிய குறும்புக்காரியாக இருக்கிறாயே ! உன்னிடம் விளையாட்டாக வாயைக்குடுத்தால் கூடத் தப்ப முடியாது போலிருக்கிறதே."

பூரணி தலையைக் குனிந்து கொண்டு சிரித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/73&oldid=555797" இலிருந்து மீள்விக்கப்பட்டது