பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7շ குறிஞ்சி மலர்

'உன் தந்தை மட்டும் இப்போது உயிரோடு இருந்தால் உனக்குப் பொருத்தமாகப் பேர் வைத்தாரே, அதற்காக ஒரு பாராட்டு விழா நடத்துவேன் நான்."

- தந்தையைப் பற்றிப் பேச்சு எழுந்ததும் பூரணியின் இதழ்களில் சிரிப்பு மறைந்தது. அவள் பெருமூச்சு விட்டாள், முகத்தில் சோகம் கவிழ்ந்தது. பேச்சு நின்று மெளனம் சூழ்ந்தது.

சாப்பிட்டு விட்டுச் சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்த பின் பூரணி புறப்படுவதற்காக எழுந்தாள்.

'வீட்டில் தங்கை, தம்பிகள் காத்துக் கொண்டிருப்பார்கள். நான் போய்த் தான் ஏதாவது சமைத்துப் போடவேண்டும். எனக்கு விடை கொடுத்தால் நல்லது."

'போகலாம் இரு. இந்த உச்சி வெய்யிலில் போய் என்ன சமைக்கப்போகிறாய்? எல்லாம் ஒரேடியாகச் சாயங்காலம் சேர்த்துச் சமைத்துக் கொள்ளலாம். ஐந்து ஐந்தரை மணிக்கு சின்ன பொண்ணும் பெரிய பொண்ணும் வந்துவிடுவார்கள். அவர்களைப் பார்த்துவிடலாம். டிரைவரிடம் சொல்லிக் காரிலேயே உன்னைக் கொண்டு விடச் சொல்கிறேன்" என்று கெஞ்சினாற் போல் அன்போடு வேண்டிக் கொண்டாள் மங்களேஸ்வரி அம்மாள். காப்பாற்றி உதவிய நன்றிக் கடமை அந்த அம்மாளிடம் எதையும் உடனடியாக மறுத்துவிட வாய் எழவில்லை பூரணிக்கு. கருத்துக்களை மறுத்தும் பதில் பேச நா எழும்பிற்று; விருப்பங்களை மறுத்துப் பேச நா எழவில்லை; உட்கார்ந்தாள்.

அன்று காலையிலிருந்து நடந்ததை ஒவ்வொன்றாக நினைத்த போது விநோதமாகத் தான் இருந்தது. முதல் நாள் திருட வந்த கிழவன் பாம்பு கடிக்கப்பட்டு இறந்த செய்தி, வயிற்றுப் பசியுடன் மனத்தில் விரக்தியோடு மதுரைநகர்த் தெருக்களில் வேலை தேடி அலையும் போது மயங்கி விழுந்தது - மங்களேஸ் வரி அம்மாள் காப்பாற்றியது அந்த அம்மாளுடன் பேச்சிய விவாதப் பேச்சுக்கள் - எல்லாம் நினைத்துப் பார்த்த போது கதைகளில் படிப்பது போலிருந்தது. வாழ்க்கையில் நடக்காமலா கதைகளில் எழுதுகிறார்கள். வாழ்க்கைப் புத்தகத்தில் ஒவ்வொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/74&oldid=555798" இலிருந்து மீள்விக்கப்பட்டது