பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 73

பக்கமாகப் படிப்பது போல் எதிர்பாராத புதிய புதிய நிகழ்ச்சித் திருப்பங்களை நினைப்பதில் சுவை கண்டாள் பூரணி.

மங்களேஸ்வரி அம்மாள் பூரணிக்குப் பொழுது போவதற்காக மாடிக்கெல்லாம் அழைத்துக் கொண்டு போய் வீட்டைச் சுற்றிக் காண்பித்தாள்; இலட்சங்களை இலட்சியமில்லாமல் செலவழித்து வீட்டை அழுகு படுத்தியிருந்தார்கள். மாடியறையில் பெரிய கடிகாரம் ஒன்று இருந்தது.

'இது மணியடிக்கிற போது இன்னிசைக் குரல் எழுப்பும். இலங்கையிலிருந்து கொண்டு வந்தது கொஞ்சம் இரு, நாலரையாகப் போகிறது. இப்போது ஒரு மணியடிக்கும். நீ கேட்டால் மிகவும் ஆச்சிரியப்படுவாய்' என்று பூரணியை அந்த அழகிய பெரிய கடிகாரத்தின் முன் கையைப் பிடித்து நிறுத்தினாள் மங்களேஸ்வரி அம்மாள்.

'பியானோ ஒலிபோல் நீட்டி முழக்கி இனிதாய் ஒரு முறை ஒலித்தது கடிகாரம். அந்த ஒலி எதிரொலித்து அதிர்ந்து அழகாய் அடங்கிய விதம் தேன் வெள்ளம் பாய்ந்து பாய்ந்த வேகம் தெரியாமல் வற்றினாற் போலிருந்தது. பூரணி சிரித்துக் கொண்டே சொன்னாள். 'கடிகாரம் காலத்தின் கழிவைக் காட்டுவது. மனிதனுடைய உயிர் நஷ்டம் அதில் தெரிகிறது. ஒவ்வொரு மணி அடிக்கும் போதும் அதில் ஒர் அழுகை ஒலிகேட்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும். புத்திசாலித்தனமாகவும் இருக்கும்.'

'போடி அசட்டுப் பெண்ணே உனக்கு வாழ்க்கையை இரசிக்கவே தெரியவில்லை. என் வயதுக்கு நான் இப்படி அலுத்துப் பேசினால் பொருந்தும்; நீ இப்படிப் பேசுவது செயற்கையாக இருக்கிறது."

'செயற்கையோ, இயற்கையோ எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். '

'எல்லாருக்கும், தோன்றாததாகத்தான் உனக்குத் தோன்று கிறது. x +

"நான் மாறுபட்ட சூழ்நிலையில் பழகாதவள். ஒரே மாதிரி நினைக்கிறவள். எனக்குத் தோன்றுவது தப்பாகவும் இருக்கலாம்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/75&oldid=555799" இலிருந்து மீள்விக்கப்பட்டது