பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 குறிஞ்சி மலர்

'பார்த்தாயா? பழையபடி வம்புக்கு இழுக்கிறாயே! என்னை:

பழமைக்கும், புதுமைக்கும் பாலம் போலிருக்கும் அந்த அம்மாளிடம் பேசுவதே இன்பமாக இருந்தது பூரணிக்கு. குழந்தையைச் சீண்டி விட்டு அதன் கோபத்தை அழகு பார்ப்பது போல் அந்த அம்மாளுக்கும் பூரணியின் வாயைக் கிண்டிவிட்டு வம்பு பேசுவது இன்பமாக இருந்தது.

ஐந்து மணிக்கு அந்த அம்மாளின் மூத்த பெண் கல்லூரியி லிருந்து வந்தாள். 'கல்லூரி வேலை நாட்களை அதிகமாக்கிய பின் சனிக்கிழமை கூட வகுப்பு வைத்து உயிரை வாங்குகிறார்கள் அம்மா' என்று அலுத்தபடியே படிப்பைக் குறை கூறிக்கொண்டு வந்தாள். படிக்கிற பெண் அவளுடைய தோற்றத்தைப் பார்த்ததும் பூரணி அசந்து போனாள். பஞ்சாபி பெண்களைப் போலப் பைஜாமாவும் சட்டையுமாகக் காண்போரை வலிந்து மயக்கும் தோற்றம். மேகப் பிசிறுகளைத் துணியாக்கினாற் போலத் தோளில் ஒரு மெல்லிய தாவணி, பூரணிக்குக் கண்கள் கூசின. தமிழ்ப் பண்போடு பார்த்துப் பழகிய கண்கள் அவை.

'பெண் அழகாயிருக்கலாம். அது அவளுடைய தவறு இல்லை. ஆனால் அழகாயிருப்பதாகத் தானே பிறரை நினைக்கச் செய்ய வலிந்து முயல்வது எத்தனை பெரிய பாவம்' என்று தான் அந்தப் பெண்ணின் கோலத்தைக் கண்ட போது பூரணி எண்ணினாள். எண்ணியதை யாரிடம் சொல்வது? யாரிடமும் சொல்லவில்லை.

மங்களேஸ்வரி அம்மாள் தன் பெண்ணுக்குப் பூரணியை அறிமுகப்படுத்தினாள். அந்தப் பெண்ணுக்குப் பார்வை, பேச்சு, எல்லாமே அலட்சியமாக இருந்தன. அந்தப் பெண் ஆங்கிலமும் தமிழும் கலந்து பெரிதாகச் சிரித்து கலகலப்பாகப் பேசினாள். பெண்ணின் பெயர் 'வசந்தா' என்று மங்களேசுவரி அம்மாளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள். பூரணி, சிறிது நேரம் பேசினோம் என்று பேர் செய்த பின்னர் பூரணியைக் கீழே தனியே விட்டு விட்டு இரட்டைப் பின்னல் சுழல மாடிக்குப் போய் விட்டாள் வசந்தா. அவள் தலை மறைந்ததும் மங்களேஸ்வரி. அம்மாள், 'இவளுக்கு ஆடம்பரம் கொஞ்சம் அதிகம்' என்று பூரணியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/76&oldid=555800" இலிருந்து மீள்விக்கப்பட்டது