பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 75 மனநிலையைப் புரிந்து கொண்டவள் போல் சிரித்தவாறு சொன்னாள். பூரணி ஒன்றும் கூறவில்லை. பதிலுக்கு மெதுவாகச் சிரித்தாள்.

"இளையவளுக்குக் கூட இன்று பள்ளிக்கூடம் கிடையாது. ஏதோ ஸ்பெஷல் கிளாஸ் (தனிவகுப்பு) என்று போனாள். இன்னும் காணவில்லையே' என்று அந்த அம்மாள் சொல்லிக் கொண்டிருந்த போதே இளைய பெண் உள்ளே நுழைந்தாள். அகலக் கரைபோட்ட பட்டுப் பாவாடையும் தாவணியுமாக இந்தப் பெண் அடக்கமாய் அம்மாவைக் கொண்டு இருந்தாள்.

'செல்லம் உனக்கு இந்த அக்காவை அறிமுகப்படுத்தப் போகிறேன். இப்படி வா!' என்று இளைய பெண்ணை அழைத்தாள் தாய். இளையபெண் அடக்கமாக வந்து நின்று கைகுவித்து வணங்கினாள். பூரணிக்கு இவளைப் பிடித்திருந்தது. குடும்பப் பாங்கான பெண்ணாகத் தெரிந்தாள் செல்லம்.

'இவளுக்குப் பேர் மட்டும் செல்ல மில்லை. எனக்கும் இவள்தான் செல்லம்' என்று பெருமையோடு இளைய பெண்ணைப் பற்றிச் சொன்னாள் மங்களேஸ்வரி அம்மாள்.

"இந்தப் பெண்ணிடம்தான் உங்களைக் காண்கிறேன் என்று தயங்காமல் தனக்குள்ள கருத்தை அந்த அம்மாளிடம் சொன்னாள் பூரணி. அப்போது மூத்தவள் மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள். பூரணி கூறியது அவள் காதில் விழுந் திருக்குமோ என்று தெரியவில்லை; விழுந்திருந்தாலும் குற்றமில்லை என்பது தான் பூரணியின் கருத்து.

'உன்னைக் காப்பாற்றியதற்கு வெறும் நன்றி மட்டும் போதாது. அடிக்கடி நீ இங்கு வந்து போய்க் கொண்டிருக்க வேண்டும், நானும் வருவேன். நீ சொல்லியிருக்கிறாயே வாழ்க்கை விபத்து, அதிலிருந்து உன்னைக் காப்பாற்றுவதற்கு நான் ஒரு வழி செய்கிறேன். சீக்கிரமே செய்கிறேன். இப்போது நீ வீட்டுக்குப் புறப்படலாம்' என்று கூறித் தன் காரிலேயே பூரணியை ஏற்றி அனுப்பினாள் மங்களேஸ்வரி அம்மாள். பூரணி புறப்பட்டாள். தானப்ப முதலி தெருவிலிருந்து திரும்பி மேலக் கோபுரத் தெருவில் கார் நுழைந்தது. மாலை மயங்கி இரவு மலரும் நேரம். வீதியிலே விளக்கொளி வெள்ளம். கண்ணாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/77&oldid=555801" இலிருந்து மீள்விக்கப்பட்டது