பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 குறிஞ்சி மலர்

'குடையைப் பிடித்த கரம் - மனக் கொதிப்பைச் சுமந்த முகம் - பெரும் பசியில் தளர்ந்த நடை' என்று பதற்றத்தோடு அவசரம் அவசரமாக எழுதி முடித்தான். 'அரவிந்தா அதற்குள் எங்கே போனாய்?" அரவிந்தன் ஓடினான். 'கோவிந்தா தியேட்டர்காரன் ஏதோ சுவரொட்டி அடிக்க வேண்டுமென்றானே, பேப்பர் அனுப்பினாயா?"

'இல்லை சார், காலையிலே வந்தான். நீங்களே உங்கள் கணக்கில் கடனாகப் பேப்பர் வாங்கி அடித்துக் கொடுத்தால் பின்னால் கொடுத்துவிடுகிறேன். என்றான். அதெல்லாம் உனக்குச் சரிப்படாது. சாயங்காலம் பேப்பரோடு வா; இல்லை யானால் நீயே ஆர்ட் பேப்பர் மாதிரி மழமழவென்று வெளுப் பாயிருக்கே. உன்னையே மெஷினில் விட்டு அடித்து விடுவேன்' என்று பயமுறுத்தி அனுப்பினேன்

'சமர்த்துதான் போ. இந்த வாயரட்டைக்கு ஒன்றும் குறைவில்லை." -

அரவிந்தன் மெல்லச் சிரித்துக் கொண்டான். ஃபோர்மேன், அச்சுக்கோப்பவர்கள், இரண்டு டிரெடில்மேன் உட்பட எல்லோரும் அரவிந்தனின் நகைச்சுவையை ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்தனர். அரவிந்தனின் குறும்புக்கு இணையே இல்லை. யாருடைய குற்றத்தையும் எவருடைய தவறுகளையும், ஒளிவு மறைவின்றிப் பளிச்சென்று நாலு பேருக்கு முன்னால் உடைத்து விடுவான். தன்னிடம் குற்றமோ பொய்களோ போன்ற அழுக்கு கள் இல்லாததால் அவனுக்கு மற்றவர்களிடம் பயமே இல்லை. இதனால் எல்லோருக்கும் அவனிடம் பயம். அவனுக்கு முன்னால் தப்புச் செய்யப் பயம். தப்பாகப் பேசப் பயம். தீயவை எல்லா வற்றுக்குமே அவன் முன் பயம் தான்!

ஒரு சமயம் தொடர்ந்தாற் போல் ஒர் அச்சுக்கோப்பவன் (கம்பாஸிடர்) ஈய எழுத்துக்களைத் திருடித் தன் டி.பன்பாக்ஸில்' போட்டுக் கடத்திக் கொண்டிருந்தான்; அரவிந்தனுக்கு இது தெரிந்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/86&oldid=555810" இலிருந்து மீள்விக்கப்பட்டது