பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 குறிஞ்சி மலர் நண்பகலில் அச்சகத்துக்கு எதிரே தெருவில் மயங்கி விழுந்த போதே அவன் மனத்திலும் மயங்கி விழுந்த அதே பெண்; அவனுக்குக் கவிதை தந்த வனப்பு, கனவு தந்த முகம், கற்பனை தந்த செளந்தர்யம், அந்த வாசற்படியில் நின்று கொண்டிருந்தது.

'நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்? சிறிது சினத்துடன்தான் கேட்டாள் பூரணி.

நான் மீனாட்சி அச்சகத்திலிருந்து வருகிறேன். என் பெயர் அரவிந்தன். புத்தகங்கள் வெளியிடுகிற விஷயமாகப் பேராசிரி யரின் பெண்ணைப் பார்த்துக் கொஞ்சம் பேச வேண்டும் என்றான்.

சிரித்துக் கொண்டே மறுமொழி கூறிய அரவிந்தன் கையில் நோட்டுப் புத்தகத்தோடு வாசல் திண்ணையின் மேல் தானாக எடுத்துக் கொண்ட உட்காரும் உரிமையோடு துணிந்து அமர்ந்து விட்டான்.

பூரணிக்கு அப்போது ஒரே கசப்பான மனநிலை. உலகத்தில் அத்தனை பேரும் ஏமாற்றுபவர்கள், அத்தனை பேரும் பிறருக்கு உதவாதவர்கள் என்கிற மாதிரி விரக்தியும் வெறுப்பும் கொதித்துக் கொண்டிருந்த சமயம். புது மண்டபத்துப் புத்தக வெளியீட்டாளர் மேலிருந்த கோபம் அத்தனை புத்தக வெளியீட்டாளர் மேலும் திரும்பியது. அரவிந்தன் வந்த விதம், சிரித்துக் கொண்டே உட்கார்ந்து பேசத் தொடங்கிய விதம் ஒன்றும் இவளுக்குக் கவர்ச்சி அளிக்கவில்லை. உதடுகள் துடிக்க, அழகிய முகம் சிவக்க அரவிந்தனை வார்த்தைகளால் சாடினாள் அவள்.

'புத்தகமுமாயிற்று; புடலங்காயுமாயிற்று. புண்ணாக்கு விற்கிறவர்கள் எல்லாம் புத்தகம் வெளியிட வந்து விடுகிறார்கள். இப்போது யாரையும் நம்பமுடிவதே இல்லை. வரும்போது சிரிக்க்ச் சிரிக்க அரிச்சந்திரன் போல் உண்மை பேசுகிறார்கள். கடைசியில் - அவள் முடிக்கவில்லை. அரவிந்தன் இடை மறித்துக் குறுக்கிட்டான். அவன் முகத்தில் சிரிப்பு மாறிவிட்டது.

'நிறுத்துங்கள் உங்கள் மனநிலை இப்போது சரியில்லை போலிருக்கிறது. இன்னொரு சமயம் வருகிறேன். நீங்கள் தெருவில் மயங்கி விழுந்து விட்டால், அதற்கு உலகமெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/90&oldid=555814" இலிருந்து மீள்விக்கப்பட்டது