பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 93

மலர மலரச் சிரிப்பு அதிகமாகிக்கொண்டு வளருகிற ஒரு வட்டப் பூப்போல் கமலாவின் முகம் சிவந்தது. பெண்ணின் முகத்தில் நாணம் பிறக்கும் போது கவிகளின் மனங்களில் கவிதைகள் பிறப்பதாகச் சொல்கிறார்களே, அது உண்மை தான் என்று கமலாவின் முகத்தில் அப்போது கொஞ்சி நின்ற அழகைக் கண்டபோது பூரணிக்குத் தோன்றியது.

கமலாவின் வீட்டுக்கு வந்து சாப்பிட்டதற்காக அக்கா கோபித்துக் கொள்வாளோ என்று பயந்து போய்ச் சம்பந்தனும் திருநாவுக்கரசும் பூரணியின் முன்னால் வந்து அவள் முகத்தைப் பார்ப்பதற்கே கூசினர்.

'சரி, நான் இவர்களையெல்லாம் கூட்டிக்கொண்டு வீட்டுக்குப் புறப்படுகிறேன்' என்று பூரணி புறப்படுவதற்கு முற்பட்டபோது கமலா சண்டைக்கே வந்துவிட்டாள்.

'வீட்டுக்காவது, புறப்படுகிறதாவது ? வீட்டில் என்ன வைத்திருக்கிறது? எனக்குத் தெரியும் பூரணி, அடுக்கு அடுக்காகப் புத்தகங்களைத் தவிர இப்போது உன் வீட்டில் வேறு ஒன்றும் இல்லை. என்னை இன்னும் ஏமாற்றப் பார்க்காதே. புத்தகங் களைப் படித்தால் அறிவுப் பசி தீரும். வயிற்றுப் பசி தீராது. எல்லாம் பார்த்துச் சிந்தித்து தீர்மானம் பண்ணி தான் நான் இவர் களை இங்கே கூட்டிக்கொண்டு வந்தேன். இங்கே அம்மா, அப்பா கூட ஊரிலில்லை. வருகிற வரை உன்னைத் தான் துணைக்கு வைத்துக் கொள்ளச் சொன்னார்கள். எனக்குத் துணையாக இருந் தாற் போலவும் ஆகும். நீயும் இவர்களும் சில நாட்களுக்கு இங்கேதான் இருக்க வேண்டும். வீட்டுக்குப் போய் விட்டால் யாருக்கும் தெரியாதபடி இவர்களையும் உன்னையும் பட்டினி போட்டுக் கொண்டு கிடக்கலாம் என்று நினைக்கிறாய் போலிருக்கிறது. நான் அதற்கு விட மாட்டேன்."

'விட வேண்டாம் கமலா நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன், அதற்குப் பதில் சொல்வாயா நீ?"

'கேளேன், என்ன கேள்வியோ?"

"வேறொன்றுமில்லை. என்னையும் இவர்களையும் இப்படி எத்தனை நாளைக்கு உன்னால் காப்பற்றிவிட முடியுமென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/95&oldid=555819" இலிருந்து மீள்விக்கப்பட்டது