பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 97

களுக்கும் நடுவில் தான் வாழ்க்கையே இருக்கிறது. இன்று நகரங்களில் இதயங்களும், அவற்றை உடைய மனிதர்களும் வாழவில்லை. இரும்பும் பிளாஸ்டிக்கும் வாழ்கின்றன. தெருவோரங்களில் குப்பைகளையும் தூசிகளையும் போல உயிருள்ள மனிதர்களும் விழுந்து கிடக்கிறார்கள். இந்த வாழ்க்கையை எப்படி மாற்றி அமைப்பது? தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று கவி பாடலாம். ஆனால் வாழ்க்கையில் அந்த விதி இன்னும் வரவில்லையே மூட்டைப்பூச்சி மருந்தையும், மயில் துத்தத்தை யும் தின்று மனிதர்கள் அல்லவா புழுபூச்சிகள் போல் அழிந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்?"

இந்தச் சில வாக்கியங்களில் அரவிந்தனின் உள்ளம் அவளுக்குப் புரிந்தது. தன்னைப் போலவே தனக்கு மிக அருகில் இந்த நாட்டு வாழ்க்கைப் பிரச்சனைகளை எண்ணி ஒர் ஆண் உள்ளமும் துடித்துக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். அரவிந்தனின் அழகும், அறிவும் குணமும் குறிக்கோளும் அவ ளைக் கவர்ந்தன. இப்படிப்பட்ட இலட்சியவாதியிடமா அந்த மாதிரிச் சீறி விழுந்து துரத்தினேன்? என்று நினைத்துத் தன்னைத் தானே நொந்து கொண்டாள் அவள் காலடியிலே மென்மையும், மணமும் மிக்க பூ ஒன்றை மிதித்து நசுக்கி விட்டாற்போல் வேதனையாக இருந்தது அவளுக்கு. அரவிந்தனுடைய கொள்கை களின் கம்பீரம் மதுரைக் கோபுரங்களைப் போல், திருமலை நாயக்கர் மகால் தூண்களைப் போல், பெரிதாய், உயரமாய் அவள் மனத்தில் கால் ஊன்றி நின்று கொண்டன.

அந்த நோட்டுப் புத்தகத்தைக் கண்களில் ஒற்றிக் கொண்டு மேஜைமேல் வைத்துவிட்டு விளக்கை அணைத்தாள். பூரணியின் உடலில் உறக்கமும் உள்ளத்தில் அரவிந்தனும் குடிகொண்டு ஆளத் தொடங்கினர். இருட்டில் நீண்ட நேரமாகக் கைகளால் துழாவித் தேடிக் கொண்டிருந்த பொருள் கிடைத்துவிட்டது போல் அரவிந்தன் என்னும் இனிய தத்துவத்தைப் புரிந்து கொண்டு விட்ட மகிழ்ச்சி அவளுக்கு.

தூக்கத்தில் இதழ்கள் நெகிழ சிரித்தது அவள் முகம். இனிமை யான கனவு ஒன்று கண்டாள் அவள் அரவிந்தன் அவளுடைய

7 - סg . u)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/99&oldid=555823" இலிருந்து மீள்விக்கப்பட்டது