பக்கம்:குறும்பா.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆங்கிலத்தில் வேறு நோக்கத்தோடு அமைந்த குறும்பாவினை தமிழில் முழுக்க முழுக்க அங்கதத்துக்காகப் பயன்படுத்தியிருப்பது ஒரு புதுமையே.

இக் குறும்பாவின் வடிவத்திலும் ஒரு புதுமை செய்திருக்கின்றார் கோவேந்தன். ஐந்தடிகள் கொண்ட பாடலோடு ஆறடிகள் கொண்ட ஒரு வடிவத்தையும் புதிதாக சேர்த்திருக்கின்றார்.

சில பாடல்கள் மெருகேறவில்லை என்பது உண்மையே. ஒரு வடிவம் பயன்படுத்தப் பயன்படுத்தத்தான் மெருகேறும். தமிழில் குறும்பாவின் காலம் இனிமேல்தான் வர வேண்டும்.

இன்னும், பலர் இவ் வடிவத்தைப் பின்பற்றி எழுதுவதற்கு இந்நூல் ஒரு வழிகாட்டியாக இருக்கட்டும்.

ம.இலெ.தங்கப்பா
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/11&oldid=1200677" இலிருந்து மீள்விக்கப்பட்டது