இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குறும்பா
11
அரசியலில் கயவர்களின் வருகை
அறியாமைக்கு நாம் அளிக்கும் சலுகை.
நரிகள் ஆள வந்துவிட்டதால்
ஒநாய்எல்லாம் உயிர் குடிக்கும்
அரிமாக்களாய் வாழ்வதுவே பெருமை!
◯
பெயரினுக்கு முன்பின் உள்ள பட்டம்
பீற்றிக்கொள்ளவே உதவும் அற்பம்;
நயத்தக்க நாகரிக
மாந்தனையும் நகைப்புக்காக்கும்
பயன் இலாத ஆரவாரச் சுற்றம்!
◯
போட்டியிட்ட பாவலர்கள் நூறு
பொங்கியதோ பாற்கடலின் வீறு!
நோட்டமிட்டுப் பார்த்தபின்பு
நூற்றில் ஒன்று தேறியது..,
பெயர்தெரியாப் பாப் புறநானூறு:
◯
இன்பம் எய்த வேண்டும் என்றான் பொன்னன்,
துன்பந்தொலைய வேண்டும் என்றான் கன்னன்,
என்றும் இந்தப் போராட்டமா?
இருவருமே வாரீர் என்று
முன்னழைத்தான் மதுக்கடைக்கு நன்னன்!