இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12
கோவேந்தன்
ஈரிருபது ஆண்டுமூத்த வள்ளி
இருபதுக்கும் இளையள் என்றாள் கள்ளி!
பேரன் வந்து பாட்டி என்றான்
பேத்தி வந்தே ஆயா என்றாள்
சீறி நின்றாள் பேரிளம்பெண் துள்ளி!
◯
இருட்டில் இன்பம் உள்ளதென்றான் துறவி
எத்துகளே இன்பம் என்றான் உறவி.
இருமனைவி, பெருமனைகள் --
எத் தொழிலும் வேண்டாம் என்றான்
அரசியலில் ஊறிவந்த பிறவி!
◯
சமயநூல்கள் கற்பதினால் பத்தி
சாரும் என்று பற்பலநூல் பற்றி,
இமைதுறந்தான், ஊண்மறந்தான்
எடுத்ததெல்லாம் முடித்துவிட்டான்
அமைதியுடன் கடவுளின்மை வெற்றி!
◯
திரைப்படத்தில் கற்பினள்போல் நடித்தாள்
சிலம்புதந்த காதை வாங்கிப் படித்தாள்.
வரிக்குவரி ஒழுக்கம் கண்டு
வாழ்க்கைக்குஇது தடையே என்று
விரைத்தெறிந்து, கொக்கோகத்தை முடித்தாள்!