பக்கம்:குறும்பா.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

கோவேந்தன்


என்னதொழில் செய்கிறாய்நீ என்றேன்
ஈடுபட்டேன் அரசியலில் என்றான்;
உன்னுடைய வாழ்க்கை வரு
வாய்க்கு வழி என்னவெனில்
இன்னும் என்ன என்றெனையே கொன்றான்!



நகைச்சுவை நூல் கிடைப்பதெங்கே என்றாள்,
நல்ல ஏட்டைப் பரிந்துரைக்கப் புகன்றாள்;
நகைச்சுவைக்கா பஞ்சம் இங்கே?
நாட்டமைச்சர் சொல்லும் செயலும்
நுகர்க என்றேன் நன்றி கூறிச் சென்றான்!



கழிகாமப் பாட்டெழுதும் போட்டி
கல்விக்கழகம் அமைத்ததுவே கூட்டி.
எழுத்தாளர் எண்ணாயிரம்
எழுதலுற்றார், திரைப்பாடல்
எழுத்தாளனைத் தேர்ந்தெடுத்தார் காட்டி!



வட்டம்ஒரு பெண்பார்த்துக் கொணர்ந்தார்,
மாவட்டம் மறுநாளில் புணர்ந்தார்
அட்டியில்லை என்றமைச்சர்
ஆசைக்கொரு வைப்பெனவே
கட்டிஅணைத்து ஊரிலேபோய் மணந்தார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/19&oldid=1201201" இலிருந்து மீள்விக்கப்பட்டது